Monday, August 22, 2011
பெருமைமிக்க சென்னப்பட்டணத்தின் 372-வது பிறந்த நாளை இன்று விமரி சையாக கொண்டாடினார்கள் சென்னை வாசிகள். கிழக்கிந்திய கம்பெனிய ரால் உருவாக்கப்பட்ட சென்னப்பட்டணம் எத்தனையோ வரலாற்று சுவடுகளை தாங்கி நிற்கிறது. 1688-ல் முதல் நகரசபையும் 1711-ல் முதல் பிரிண்டிங் பிரசும் தொடங்கப்பட்டது.
காலங்களை கடந்து நிற்கும் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், கிறிஸ்தவர்களுக்காக உருவான சாந்தோம் பேராலயம், அரண்மனைக்காரன் தெரு புனித அந்தோணியார் தேவாலயம், முஸ்லீம்களுக்காக திருவல்லிக்கேணி பெரிய மசூதி, ஆயிரம் விளக்கு மசூதி, ரிப்பன் மாளிகை, விக்டோரியா ஹால், சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள்... இவைகள் அனைத்தும் சரித்திர சான்றுகளாக இன்றளவும் காட்சியளிக்கின்றன.
மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ் என்று சினிமா பாடலிலும் இடம் பிடித்த மெட்ராஸ் இன்று சென்னை பெருநகரமாக வளர்ந்து உலகில் உள்ள 35 பெரிய நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. சென்னையின் பிறந்த நாளை கல்லூரி மாணவ- மாணவிகள் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார்கள். சென்னை மருத்துவ கல்லூரி இந்தியாவில் முதல் மருத்துவ கல்லூரியாக 1835-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பழமை வாய்ந்த நகரில் மிகப்பழமையான - புகழ் வாய்ந்த கல்லூரியில் இன்று சென்னை தினத்தை உற்சாகமாக கொண்டாடினார்கள்.
எழும்பூர் கண் மருத்துவமனையின் பாரம்பரிய கட்டிடத்தின் முன்பு மருத்துவ கல்லூரி டீன் கனக சபை முன்னிலையில் மாணவ- மாணவிகள் கேக் வெட்டி சென்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி னார்கள். விழாவையொட்டி 175 வருடங்களுக்கு முன்பு கண் பரிசோதனைக்கு டாக்டர்கள் பயன்படுத்திய கருவிகள், அறுவை சிகிச்சைக்கான கருவிகள், 500-க்கு மேற்பட்ட கண்புரை மாதிரி கள் கண்காட்சியாக வைக் கப்பட்டு இருந்தன.
அவற்றை மருத்துவ மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்தனர். நிகழ்ச்சியில் மருத்துவ மனை இயக்குனர் டாக்டர் வசந்தா, பேராசிரியர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். எழும்பூர் அருங்காட்சி யகத்தில் சிறப்பு கண்காட் சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். 350 ஆண்டுகளுக்கு முந்தைய சென்னை நகரின் அமைப்பு, நாணங்கள், எடை கற்கள், அளவைகள் உள்ளிட்ட பல அரிய பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன.
இந்தியாவில் முதல் முதலாக ரேடியோ ஒலி பரப்பும் சென்னையில்தான் 1924-ல் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமின்றி சித்தூர், இலங்கை வரை ஒலிபரப்பு துல்லியமாக இருந்துள்ளது. இப்போது காலங்களை கடந்து அந்த கருவி காட்சி பொருளாக இருக்கிறது. அரிய பொருட்கள் மட்டு மல்ல மக்களின் வாழ்க்கையும் திரும்பி பார்க்க வைக்கிறது. பாரம்பரியமான சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு இந்தியா முழுவதிலும் இருந்து வருபவர்கள் அங்கிருந்து கை ரிக்ஷா மூலமாகத்தான் வீடுகளுக்கு செல்வார்கள்.
இப்போதும் அதன் நிழலாக 2000-க்கும் மேற்பட்ட சைக்கிள் ரிக்ஷாக்கள் வால்டாக்ஸ் ரோட்டில் உள்ளன. சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் மதுராந்தகம் குப்புசாமி, லால்குடி குணசேகர் ஆகியோரின் மலரும் நினைவுகள் வருமாறு:- 40 வருடங்களாக இங்கு சைக்கிள் ரிக்ஷா ஓட்டி வருகிறோம். முன்பு சென்ட் ரலில் இருந்து மைலாப் பூருக்கு 40 பைசா வாடகை.
அப்போது தினமும் 2 முதல் 3 ரூபாய் சம்பாதிப்பேன். அது குடும்பத்துக்கு போது மானதாக இருந்தது. இப்போது நிலைமை மாறிவிட்டது. ஆட்டோக்கள் வந்ததும் சைக்கிள் ரிக்ஷாவுக்கு மவுசு குறைந்துவிட்டது. ஆனால் இன்றும் பாதுகாப்பு கருதி மார்வாடிகள் எங்கள் ரிக்ஷாவில் வருவதையே விரும்புகிறார்கள். பலர் பாவம் கை வண்டி தொழிலாளர்கள் பிழைக்கட்டும் என்று எங்கள் வண்டியில் ஏறி பயணம் செய்கிறார்கள்.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் சென்னையை சுற்றி பார்க்கவும் ரிக்ஷாக்களில் வருவதுண்டு. இப்போது தினமும் ரூ. 200 சம்பாதிக்கிறோம். அப்படி யிருந்தும் குடும்பத்தை நடத்த அவதிப்படுகிறோம். வளர்ந்து வரும் சென்னையில் எங்கள் வாழ்க்கை தரம் உயருவது எப்போது? என்பதுதான் தெரியவில்லை.

No comments:
Post a Comment