Tuesday, August 23, 2011

அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையூடு 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்ய்வேண்டும்-குணதாச அமரசேகர!

Tuesday, August 23, 2011
அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்து புதிய அரசியல மைப்பை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தும் தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் இலங்கையின் வெளிநாட்டுத் தூதுவர்கள் திறமையற்றவர்கள் அவர்களது செயற்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை எனவும் குற்றம்சுமத்தியுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மிஹிலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்களை தோல்வியடையச் செய்வோம் என்ற தொனிப் பொருளில் தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடுசெய்த கருத்தரங்கிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு உரையாற்றிய ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் டாக்டர் குணதாச அமரசேகர, 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் மீண்டும் பயங்கரவாதத்துக்கும், பிரிவினைவாதத்துக்கும் அது வழிவகுக்கும். யுத்தக் குற்றச்சாட்டுக்களை ஒரு தரப்பினர் சுமத்தும்போதும் இந்தியாவும் இன்னொரு தரப்பும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறும் அதனை மேற் கொண்டால் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் வாபஸ் பெறப்படுமென்றும் அழுத்தம் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கெல்லாம் ஜனாதிபதி அடிபணியலாகாது. எனவே நாம் அனைவரும் அவருக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இங்கு உரையாற்றிய சிரேஷ்ட சட்டத்தரணி கோமின்தயாசிறி,13 ஆவது திருத்தத்தை இரத்து செய்து புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். இதற்காகவே மக்கள் அரசுக்கு ஆணையை வழங்கினார்கள் கூறியுள்ளார்.

இந்தியாவின் பேச்சைக் கேட்டு இதனை நடைமுறைப்படுத்தினால் எதிர்காலத்தில் தனித் தமிழீழம் தோன்றும், எமது நாட்டின் மீது சீனா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் அதிக ஆர்வ முடன் உள்ளன.இது எமது நன்மைக்காக அல்ல. அவர் களது பொருளாதார நன்மைகளுக்காக எமது நாட்டைப் பயன்படுத்துவதே நோக்கமாகும். யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி எமது தலைவர் களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென இந்தியா மற்றும் மேற்குலகம் வலியுறுத்துகின்றன.

அப்படியென்றால், இந்திய சமாதானப் படையினர் இங்கிருந்தபோது மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் விசாரணைகளை நடத்தவேண்டும், சர்வ தேசம் தொடர்ச்சியாக எம் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறது. இதற்கு சிறந்த முறையில் பாதுகாப்பு அமைச்சு பதில்களை வழங்குகின்றது.ஆனால் வெளிநாட்டிலுள்ள தூதுவர் களின் இந்த விடயம் தொடர்பான பணி திருப்திகரமானதாக இல்லை. அவர்கள் திறமையற்றவர்களாக உள்ளனர் என கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment