Sunday, July 17, 2011

அனோமாவை தேர்தல் களத்தில் இறக்குவதில் UNPகும் JVPக்கும் இடையில் போட்டி!

Sunday, July 17, 2011
கொழும்பு மாநகரசபை மேயர் பதவிக்காக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகாவை களமிறக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பியும் போட்டியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு தரப்பினருமே மாநகரசபைத் தேர்தலில் அனோமாவை போட்டியிட வைப்பதில் ஆர்வம் காட்டி வருவதகாக் குறிப்பிடப்படுகிறது.

எவ்வாறெனினும், ஐக்கிய தேசியக் கட்சியினரை விடவும், ஜே.வி.பியுடன் அனோமா பொன்சேகா நெருங்கிச் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜே.வி.பி வேட்பாளராக அனோமா நிறுத்தப்படலாம் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்த தகவலை ஜே.வி.பி பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் நிராகரித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment