Sunday, July 17, 2011

நியூயார்க்கில் சிறுமிகளை நிர்வாண வீடியோ எடுத்தார் இந்திய டாக்டர் மீது செக்ஸ் புகார்!

Sunday, July 17, 2011
இந்தியாவைச் சேர்ந்தவர் ராகேஷ் பூன் (53). இவர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் குழந்தைகள் நல டாக்டராக பணி புரிகிறார். இவர் தன்னிடம் சிகிச்சை பெற வரும் சிறுமிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என தனியாக அழைத்து செல்வார்.

பின்னர் அவர்களை நிர்வாணமாக வீடியோ மற்றும் போட்டோ எடுத்து கொள்வார். அந்த போட்டோவுடன் தனது நிர்வாண படத்தை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்து வைத்து இருந்தார்.

இதை தொடர்ந்து அவர் மீது நியூயார்க் போலீசில் செக்ஸ் புகார் கூறப்பட்டது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது 60 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

No comments:

Post a Comment