Thursday, July 14, 2011யாழ் மாவட்டத்தில் விவசாயத்துறை மீன்பிடித்துறை தொழிற்துறைகளுடன் கல்வி சுகாதாரம் சுயதொழில் வாழ்வாதாரம் உள்ளிட்ட அனைத்து முன்னெடுக்கப்படும் பசில் ராஜபக்ஷ!
யாழ் மாவட்டத்தில் விவசாயத்துறை மீன்பிடித்துறை போன்ற தொழிற்துறைகளுடன் கல்வி சுகாதாரம் சுயதொழில் வாழ்வாதாரம் உள்ளிட்ட அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளும் ஜனாதிபதி அவர்களின் தலைமையின் கீழும் விரைவாகவும் சிறப்பாகவும் முன்னெடுக்கப்படுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் நெல்லியடி பொதுச் சந்தையை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த கால யுத்தத்தால் இலங்கையில் குறிப்பாக வடமாகாணத்தில் அதிலும் யாழ்ப்பாணத்தில் மக்கள் பல்வேறுபட்ட நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்ததுடன் வைத்தியசாலைகள் பாடசாலைகள் வீதிகள் உள்ளிட்ட அனைத்து அரச கட்டுமானங்களும் கடும் பாதிப்புக்களைச் சந்தித்திருந்தன.
இந்த நிலையில் அவற்றை மீள் அமைக்க வேண்டிய முக்கிய பொறுப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசையே சார்ந்து நிற்கிறது.
அந்த வகையில் யாழ் மாவட்டத்தை சிறப்பான முறையில் குறிப்பாக விவசாயம் மீன்பிடி கல்வி சுகாதாரம் சுயதொழில் உள்ளிட்ட அனைத்து வாழ்வாதார அபிவிருத்தி செயற்பாடுகளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிநடத்தலின் கீழும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் எதிர்வரும் காலங்களிலும் சிறப்பாக முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்நிலையில் இவ்வாறான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு ஆளும் அரசுக்கு மக்கள் முழுமையான ஆதரவுப் பலத்தை நல்கும் போது மட்டுமே அபிவிருத்தி பணிகளை மென்மேலும் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் கல்வி கலாசாரம் பொருளாதாரத்தையும் சிறப்பான முறையிலும் முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் வகையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
முன்பதாக நல்லூர் கோப்பாய் கரவெட்டி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் மக்களுக்கான பல்வேறு அபிவிருத்திப் பணிகளை அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் இன்றைய தினம் முன்னெடுத்துள்ளார்.
அந்த வகையில் குடிநீர் பாதை திருத்தம், மின்சாரம் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதும் அத்துடன் நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட விவசாய உள்ளீடுகள் மலசல கூடங்களுக்கான உபகரணங்கள் கற்றல் உபகரணங்கள் கடன் திட்டங்கள் என மக்களது வாழ்வாதாரத் திட்டத்திற்கான உதவித்திட்டங்களும் வழக்கப்பட்டன.
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அந்தந்த பிரதேச செயலர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment