Sunday, July 17, 2011

தேர்தல் சட்டத்தை மீறி ஊர்வலம் நடத்துவோரை கைது செய்ய நடவடிக்கை!

Sunday, July 17, 2011
தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் ஊர்வலம் நடத்துவோரை கைது செய்வதற்கு
நடவடிக்கைகைளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பிலான சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தேர்தல் தேர்தல்கள் ஆணையாளர் கவனம் செலுத்தியுள்ளார் என தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் ஊர்வலங்களை நடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்தி பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஊரடவலங்கள் நடத்தும் போது அமைதி நிலைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் அது தொடர்பிலான சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறுவோரை கைது செய்து நிதி மன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தேர்தல்பாதுகாப்ப நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிங் மாஅதிபரி காமினனி நவரத்ன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment