Sunday, July 17, 2011வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கைதிகள் சிலர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் வி. ஆர் சில்வா கூறியுள்ளார்.
2007 ஆம் ஆண்டு மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தங்கள்மீதான விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கைதிகள் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகின்ற போதிலும் அதனை உடனடியாக மேற்கொள்ள முடியாதென சிறைச்சாலைகள் அணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியா சிறைச்சாலையில் இருக்கும் கைதிகள் தொடர்பான வழக்குகள் வவுனியா மற்றும் மன்னார் நீதிமன்றங்களின் ஊடாகவே விசாரிக்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment