Sunday, July 17, 2011

திபெத் பிரச்சினை தலாய்லாமாவுடன், ஒபாமா ஆலோசனை!

Sunday, July 17, 2011
திபெத் பிரச்சினை குறித்து தலாய்லாமாவுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆலோசனை நடத்தினார். திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா கடந்த 10 நாட்களாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து புத்த மத பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார்.

இந்த நிலையில் அவர் தன்னை சந்திக்க அமெரிக்க அதிபர் ஒபாமா அனுமதி அளித்து இருந்தார். அதை அறிந்த சீனா அதிபர் ஒபாமா தலாய்லாமாவை சந்திக்க கூடாது. எனவே அதற்கான அழைப்பை ரத்து செய்யும்படி கேட்டுக் கொண்டது. அதை பொருட்படுத்தாமல் தலாய்லாமாவை அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் நேற்று சந்தித்தார்.

இவர்களது சந்திப்பு வழக்கமாக உலக தலைவர்களை சந்திக்கும் ஓவல் அலுவலகத்தில் வைத்து நடை பெறவில்லை. மாறாக, அதிபர் ஒபாமாவின் வீட்டில் உள்ள மேப் அறையில் நடந்தது. அவர்கள் இருவரும் 44 நிமிடங்கள் பேசினார்கள். அப்போது, திபெத் பிரச்சினை குறித்து இருவரும் பேசினார்கள்.

தி பெத்தியர்களின் மனித உரிமைகள், மத சுதந்திரம் போன்றவை குறித்து தலாய்லாமாவுடன் ஒபாமா ஆலோசனை நடத்தினார். இவர்களின் இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment