Saturday, July 16, 2011

அடையாள அட்டை விண்ணப்பங்கள் முன்கூட்டியே சமர்ப்பிக்கப்படவேண்டும்!

Saturday, July 16, 2011
நவம்பர் மாதம் 30 ஆம் திகதி அன்று 16 வயது பூர்த்தியாகும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

நவம்பர் மாதம் 30 ஆம் திகதி அன்று 16 வயது பூர்த்தியாகும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள குறித்த மாணவர்கள் 16 வயது பூர்த்தியாகும் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே அதிபர்களுடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஜகத் விஜேவீர கூறியுள்ளார்.

விண்ணப்பதாரிகளுக்கு 16 வயது பூர்த்தியானவுடன் அவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சையின் போது எதிர்நோக்க நேரிடும் பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக நாளாந்தம் ஆயிரம் தொடக்கம் ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களுக்கு அமைவாக கால தாமதமின்றி அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கான ஒழுங்குகளை செய்துள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் ஜகத் விஜேவீர கூறியுள்ளார்.

No comments:

Post a Comment