Saturday, July 16, 2011புலிகள் வெளிநாடுகளில் மீள ஒருங்கிணையும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக பிரெஞ்சு நடப்பு விவகார சஞ்சிகையொன்று அதன் கன்னிப் பிரதியில் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ்நாடு, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புலிகள் மீள ஒருங்கிணையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் யுத்தம் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் மீள ஒருங்கிணையும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சில நாட்டு புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பல்வேறு வழிகளில் புலிகள் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment