Friday, July 15, 2011

வடக்கின் வசந்தம் - புதிதாக எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்!

Friday, July 15, 2011
வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் மூலம் எரிபொருள் நிரப்பும் நிலையங்களை திறந்து வைக்க பெற்றோலிய வளத் துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய வடமாகாணத்தில் ஏழு இடங்களில் புதிதாக எரிபொருள் நிரப்பும் நிலையங்களை திறந்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிடுகிறார்.

அந்தவகையில் வுனியா, முல்லைத்தீவு மற்றும் விசுவமடு ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் இன்று திறந்து வைக்கப்பபடவுள்ள அதேவேளை கிளிநொச்சிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் மேலும் நான்கு நிரப்பு நிலையங்கள் நாளை திறந்துவைக்கப்படவுள்ளன.

புதிதாக திறந்து வைக்கப்படவுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் நிர்வகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடபகுதியில் மீள்குடியேற்றம் மற்றும் நிலக்ககண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவுபெற்றதும் அம் மக்களுக்கு தேவையான மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து எரிபொருட்களையும் விநியோகிக்க இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த எரிபொருள் நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை அநுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய பரிதேசங்களில் அமைந்துள்ள களஞ்சியசாலைகளில் இருந்து பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment