Friday, July 15, 2011

இந்தோனிசியாவில் அகதிகள் தொடர்ந்தும் தமது கப்பலில் இருந்து தரையிறங்க மறுப்பு தெரிவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது!

Friday, July 15, 2011
இந்தோனேசியாவில் இடைமறிக்கப்பட்ட இலங்கை அதிகள் தொடர்ந்தும் தமது கப்பலில் இருந்து தரையிறங்க மறுப்பு தெரிவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இடைமறிக்கப்பட்டு, ஒரு வாரம் நிறைவடையவுள்ள நிலையில், அவர்கள் தொடர்ந்தும் கப்பலிலேயே தங்கியுள்ளனர்.

அவர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து மலேசியா சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அங்கிருந்து நியூசிலாந்து செல்லும் வழியில் கடந்த சனிக்கிழமை பிடிபட்டனர்.

இதற்கிடையில் இந்தோனேசியா அகதிகளின் தளமாக மாறியுள்ளதாக பி.பி.சி தெரிவித்துள்ளது.

தற்போது குறித்த அகதிகளிடம்; எதிர்வரும் ஒரு மாதத்துக்கான உணவு மற்றும் குடிநீர் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையிலேயே அவர்கள் தம்மை நியூசிலாந்தில் குடியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment