Monday, July 18, 2011புலிகள் அமைப்பின் அரசியல் துறைப் பிரிவின் மகளீர் அணியின் முன்னாள் தலைவியான தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி இன்று கொழும்பு இலக்கம் 1 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதன் போது, தமது தரப்பு வாதங்களை முன்வைத்த குற்றப்புலனாய்வு பிரிவினர், தமிழினி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் இன்னும் நிறைவுபெறவில்லை என தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தின் அனுமதியின்றி தமிழினி, பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு இரண்டு முறை அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் அறிவித்திருந்த போதிலும், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.
தமிழனியை எதிர்வரும் 1 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் ரஸ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார். தமிழினி சார்பில் மஞ்சுள பத்திரராஜவுடன் துஷி ஜேசுதாஸ் ஆஜராகியிருந்தார்.
No comments:
Post a Comment