Thursday, July 14, 2011மீகஹதென்ன பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவரையும், பத்து வயதான பிள்ளையொன்றையும் கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிரத்தியேக வகுப்பொன்றுக்குச் சென்ற பிள்ளையும், பிள்ளையை அழைத்துச் செல்வதற்காக வந்த தாயும் நேற்றுபகல் முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இது தொடர்பாக பிள்ளையின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பிள்ளையை விடுவிப்பதற்காக ஐந்து இலட்சம் ரூபாவை, தாயின் வங்கிக் கணக்கில் வைப்பு செய்யுமாறு இனந்தெரியாத ஒருவர் நேற்றிரவு தொலைபேசி ஊடாக தெரிவித்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment