Sunday, July 17, 2011அண்மையில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்த ஒரே ஜனநாயக நாடாக இலங்கை திகழ்கின்றது என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹீத் சூலர் தெரிவித்துள்ளார் என கொழும்பின் சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தின் காங்கிரஸ் சபை உறுப்பினராக சூலர் கடமையாற்றுகின்றார்.
இலங்கையில் இடம்பெற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் பிழையான கருத்துக்கள் நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு தாம் விஜயம் செய்துள்ளதாகவும், இலங்கையின் நடவடிக்கைகளை உன்னிப்பதாக அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த 300000 மக்களின் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட 11000 புலி உறுப்பினர்களில் பலர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் நீண்ட காலமாக கடற்படை மற்றும் புலனாய்வுத் தகவல்கள் தொடர்பான உறவுகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உறவுகளை உதாசீனம் செய்யக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்iயின் அபிவிருத்திப் பணிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார் என அந்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment