Sunday, July 17, 2011

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு மக்களின் நிலை!

Sunday, July 17, 2011
நீதிமன்ற உத்தரவிற்கமைய ஒத்திவைக்கப்பட்டிருந்த சில உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளன. குறிப்பாக வடக்கில் யாழ் ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இத் தேர்தல்கள் முழு அளவில் நடை பெறவுள்ளன. இதற்காக அம்மாவட்டங்கள் தற்போது தேர்தல் களமாக மாறியுள்ளன. பிரதான கட்சியாக ஆளுங்கட்சி களமிறங்கியுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பும் அம்மாவட்டங்களில் போட்டியிடுகிறது.

முப்பது வருட காலமாகத் தமிழ் மக்களது உயிர்களுடன் விளையாடிய கோர யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டு வந்து அப்பகுதிகளை என்றுமில்லாதவாறு அபிவிருத்தி செய்து வரும் அரசாங்கத்தின் பணிகளை தமிழ் மக்கள் வரவேற்றுள்ள நிலையில் இத் தேர்தல் வடக்கில் ஆளுங்கட்சிக்கு எவ்விதமான சவால்களையும் கொண்டிராத தேர்தலாகவே அமையவுள்ளது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் கடந்த இருபது, இருபத்தைந்து வருடங்களுக் கும் மேலாக அகதி முகாம்களில் தமது வாழ்க்கையை நடத்தி வந்த மக்கள் கடந்த ஒன்றரை வருடங்களாக அரசாங்கம் எடுத்த தீவிர முயற்சியின் காரணமாகத் தற்போது தமது சொந்த இடங்களில் குடியேறியுள்ளனர். இவர்களுக்கான வாழ்வாதார உதவிக ளும் வழங்கப்பட்டு இன்று இம்மக்கள் தமது இயல்பு வாழ்விற்குத் திரும்பியுள்ளனர்.

தமிழர் உரிமைக்கான விடுதலைப் போராட்டம் என ஆரம்பித்த விடுதலைப் புலிகள் அத னைப் பயங்கரவாதப் போராட்டமாக மாற்றியமைத்ததன் விளைவாகத் தமிழ் மக்கள் இன்று அனைத்தையும் இழந்த நிலையில் அரசாங்கத்தின் உதவிகளைப் பெற்று மீண் டும் தமது போராட்டத்திற்கு முன்னரான இயல்பு வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் யுத்தம் காரணமாக அழிவிற்குள்ளான வடக்கையும், கிழக்கையும் அரசாங்கம் துரிதமாக அபிவிருத்தி செய்து வருகின்றது.

முப்பது வருடங்களாக எவ்விதமான அடிப்படை வசதிகளுமே இல்லாத நிலையில் வாழ்ந்து வந்த இம்மக்கள் பிரதேசங்கள் இன்று நாட்டின் ஏனைய பகுதிகளை விடவும் அபிவிரு த்தி கண்ட பிரதேசங்களாக மாறி வருகின்றன. இதற்கு அம்மக்கள் அரசாங்கத்திற்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளார்கள்.

தமது பகுதியின் அபிவிருத்திகள் தொடர்வதற்கும், தமது சொந்த இருப்பிடங்களில் தொட ர்ந்தும் சுதந்திரமாக வாழ்வதற்கும் அம்மக்கள் அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளனர். யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு மிகக் குறுகிய காலத்தினுள்ளேயே தமது பகுதி கள் கண்ட பாரிய அபிவிருத்தியை மக்கள் நன்றியுடன் நினைவு கூருகின்றனர். இதற் காக அவர்கள் ஜனாதிபதிக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கின்றனர்.

புலிகள் இருந்த காலத்தில் தாம் ஒரு வெளியுலகம் தெரியாத இருண்ட யுகத்தில் வாழ்ந் ததை அம்மக்கள் இன்று உணர்கின்றனர். வெற்றிபெற முடியாத ஒரு போராட்டத்திற்காக தமது முப்பது வருட கால வாழ்க்கையைப் புலிகள் பயன்படுத்தியுள்ளனர் என்பதை இன்று உணர்ந்துள்ளனர். இதற்காகப் புலிகளுடன் கைகோர்த்து நின்று தம்மை ஏமாற் றிய தமிழ்த் தலைமைகளை அம்மக்கள் இன்று நொந்து கொள்கின்றனர்.

தமதும், தமது உறவுகளினதும் விலைமதிப்பிட முடியாத உயிர்கள், உடைமைகள் என்ப வற்றின் அழிவிற்குக் காரணமாகவிருந்த புலிகளுக்கு ஊதுகுழலாக இருந்துவிட்டு இன்று வெட்கமில்லாது வெள்ளை வேட்டி உடுத்து தம்மிடம் வாக்குக் கேட்டுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தமிழினம் தனது வெறுப்பைக் காட்டி வருகிறது. புலிகளின் தாளத்திற்கு நடனமாடிய இவர்கள் தமிழ் மக்களைப் பற்றி ஒருபோதும் சிந்திக்கவில்லை. தேர்தல் காலத்தில் மட்டும் தமிழினம் மீது அக்கறை உள்ளவர்கள் போல் நடிப்பதே தமிழ்க் கூட்டமைப்பின் தந்திரம் என்பது பிறந்த குழந்தைக்கும் இன்று தெரிந்த விடயமாகிவிட்டது.

எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் வடக்கு மக்கள் மிகத் தெளிவாக இருந்து தமது நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டு அதனைச் செயலிலும் காட்டிவரும் ஆளுங்கட்சிக்குத் தமது அமோக ஆதரவை வழங்குவார்கள் என்பதில் எவ்விதமான சந்தேகமும் கிடையாது. தமிழ் மக்கள் முப்பது வருட கால அழிவை நினைத்துப் பார்க்க வேண்டும். அன்று தமிழ் இளைஞர்களின் கைகளில் ஆயுதங்க ளைத் திணித்துப் போராட வைத்து அவர்கள் திசை மாறிய போதும் அதை ரசித்துக் கொண்டிருந்த தமிழ்த் தலைமைகளின் போக்கே தமிழினத்தின் அழிவிற்குக் காரணமாக அமைந்தது. இன்று அதே தமிழ்த் தலைமைகள் மீண்டும் வீர வசனங்கள் பேசி தமிழ் இளைஞர்களை உசுப்பேற்றி விடப் பார்க்கின்றது.

இவ்வாறு செயற்பட்டு தமிழ் இளைஞர் வாழ்வுடன் விளையாடி வரும் எந்தவொரு தமிழ் தலை மைகளின் பிள்ளைகளும் போராட்டத்தில் ஆயுதம் ஏந்தியது கிடையாது. அவர்கள் யாவரும் இந்தியாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் படித்துப் பட்டம் பெற்று டாக்டர்க ளாகவும், எஞ்சினியர்களாகவும், வக்கீல்களாகவும் உள்ளனர். அப்பாவிகளின் பிள்ளை கள் போராட்டம் எனப் போய் உயிர்களை மாய்த்துக் கொண்டனர்.

இதனால்தான் இனியும் ஒரு போராட்டம் தமிழினத்திற்குத் தேவையில்லை. அரசாங்கத்துடன் இணைந்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து நமது பிரதேசங்களைக் கட்டியெ ழுப்ப வேண்டும். சுயநலவாத தமிழ்த் தலைமைகளை ஓரங்கட்டுவதுடன், அரசுடன் இணைந்து சாணக்கியமாக அதேவேளை கெளரவமான முறையில் அரசியல் நடத்தும் தமிழ் தலைவர்களைத் தெரிவு செய்து அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment