Friday, July 22, 2011சட்டவிரோதமான முறையில் இந்தியா சென்ற இலங்கைரை தனுஷ்கோடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!
சட்டவிரோதமான முறையில் இந்தியான சென்ற இலங்கையர் ஒருவரை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரையோரப் பகுதியான தனுஷ்கோடி பிரதேசத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 44 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடவுச் சீட்டோ அல்லது வீசாவோ இன்றி குறித்த நபர் இந்தியாவிற்குள் பிரவேசித்துள்ளார். அதிக வேக படகு மூலம் குறித்த நபர் இலங்கையிலிருந்து, தமிழ்நாடு சென்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது தமிழக காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும், சந்தேக நபர் க்யூ பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களிலும் தாம் இந்தியாவிற்கு பல தடவைகள் இவ்வாறு பயணம் செய்துள்ளதாக சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment