Wednesday, July 20, 2011எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் வாக்களிப்பின் போது கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள்
இதன்படி அவர்கள், வடக்கி;ல் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மற்றும் கடுவெல மாநகரசபை பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்
இந்த தகவலை ஆணைக்குழுவின் சட்டச்செயலாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்
தமது கண்காணிப்பு பணிகளுக்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நாளை குறித்த பிரதேசங்களுக்கு செல்லவுள்ளனர்
இந்தநிலையில் ஏனைய தேர்தல் கண்காணிப்பாளர்களின் பணிகளை காட்டிலும் தமது பணிகளை வித்தியாசமான முறையில் அமையும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டச்செயலாளர் நிமல் புஞ்சிஹேவா கூறினார்
No comments:
Post a Comment