Friday, July 15, 2011

துரோகிகளின் நடவடிக்கைகள் குறித்து விழிப்புடன் செயற்பட வேண்டும்-விமல் வீரவன்ச!

Friday, July 15, 2011
துரோகிகளின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு உள்ளேயும் இவ்வாறான துரோகச் சக்திகள் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஹெட்ஜின் கொடுக்கல் வாங்கல் மற்றும் தரம் குறைந்த பெற்றோல் விநியோகம் ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

யுத்தத்தின் பின்னர் நாடு முன்நோக்கி நகர்ந்து செல்வதாகவும் அதனை தடுத்து நிறுத்த சில சக்திகள் முனைப்பு காட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து சில சக்திகள் சூழ்ச்சித் திட்டங்களை தீட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்ச்சித் திட்டங்களுக்கு அரசாங்கத்தைச் சேர்ந்த சில தரப்பினரும் உடந்தையாக செயற்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான சக்திகளிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment