Friday, July 15, 2011க.பொ.த.உயர்தரம் 50 கைதிகள், 302 முன்னாள் புலி உறுப்பினர்கள் பங்கேற்பு!
க. பொ. த. உயர்தரப் பரீட்சை எதிர் வரும் ஆகஸ்ட் 08 ஆம் திகதி ஆரம் பிக்கப்படுகிறது. இம்முறை 2 இலட்சத்து 94 ஆயிரம் மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.
பாடசாலை பரீட்சார்த்திகள் 2 இலட்சத்து 4 ஆயிரம் பேரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 90 ஆயிரம் பேரும் இம்முறை க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருப்பதாகவும் ஆணையாளர் கூறினார்.
இதேவேளை, களுத்துறை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளைச் சேர்ந்த 50 சிறைக் கைதிகளும் வவுனியா புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள 302 புலிதோற்றவிருப்பதாகவும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.
பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரீட்சைகள் திணைக்களம் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
அத்துடன் புனர்வாழ்வு நிலையங் களிலுள்ள க. பொ. த. உயர்தரப் பரீட்சார்த்திகளில் ஐந்து பெண்களும் 297 ஆண்களும் பரீட்சைக்குத் தயாராகி வருவதாகவும் அவர்களுக்கான விசேட வகுப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.
No comments:
Post a Comment