Thursday, July 21, 2011

நாட்டின் 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற மூன்று நாட்களேயுள்ள நிலையில் விசேட பாதுகாப்பு:பொலிஸ் ரோந்து நடவடிக்கை!

Thursday, July 21, 2011
நாட்டின் 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற மூன்று நாட்களேயுள்ள நிலையில் தேர்தல் தொகுதிகளில் கடும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் ரோந்து நடவடிக்கைகளும் முன்னெடுக் கப்பட்டு வருவதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தினகரனுக்குத் தெரிவித்தார்.

ஒரு மாநகர சபை, ஒன்பது நகர சபைகள், 55 பிரதேச சபைகளையும் சேர்ந்த 2 ஆயிரத்து 140 தேர்தல் தொகுதிகளிலும் பெரும் எண்ணிக்கையான பொலிஸார் தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன ரெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை தேர்தல் சமயங்களில் வன்முறைகள் இடம்பெறின் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிலைமையை அமைதியாக்கும் நோக்கில் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் கலகத் தடுப்பு பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். தேர்தல் நடைபெறும் இடங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் நிலைய அதிகாரிகள் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் அவ்வப் பகுதிகளில் அமைதியை பேணி வருவதாகவும் இதுவரை பாரியளவிலான முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண கூறினார்.

நீண்ட காலத்திற்குப் பின்னர் தேர்தல் நடைபெறும் வடக்கு, கிழக்கிலும் தென் பகுதிகளிலும் கூடுதல் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை வாக்களிப்பு நிலையங்கள், கணக்கெடுப்பு நிலையங்கள் மற்றும் வாக்களிப்பு பெட்டிகளை எடுத்துச் செல்லல் ஆகியவற்றின் பாதுகாப்புக்களை பலப்படுத்தும் நோக்கில் விசேட பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொலிஸ் வாகனங்களும் கடமையிலீடுபடுத்தவிரு ப்பதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் தினத்தன்றோ அல்லது தேர்தல் பெறுபேறுகள் வெளியாகும் தினத்திலோ ஏதேனும் வன்முறைகள் இடம்பெறின் பொதுமக்கள் தமது பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் நிலையம் அல்லது 119 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக சம்பவம் தொடர்பான முறைப்பாட்டினை வழங்குவதன் மூலம் அமைதியான முறையில் தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டு மெனவும் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment