Friday, July 15, 2011

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தயாரிக்கும் பணிகள் 50 வீதம் பூர்த்தி!

Friday, July 15, 2011
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தயாரிக்கும் பணிகள் 50 வீதம் பூர்த்தியாகி உள்ளதாக ஆணைக்குழுவின் தலைவரும் முன்னாள் நீதியரசருமான சீ.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட உள்ளது. இறுதி அறிக்கைக்கு முதல் இடைக்கால அறிக்கை ஒன்றை கையளிக்கும் எண்ணம் கிடையாது.

செனல் 4 தொலைக்காட்சி அண்மையில் ஒளிப்பரப்பிய கொலைக்களம் வீடியோ படத்தை ஆணைக்குழு தற்போது ஆராய்ந்து வருகிறது. வீடியோ காட்சிகளின் பின்னணி மாத்திரமல்லாது, விஞ்ஞான ரீதியிலும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை நடத்தி வருவதாகவும் சீ.ஆர்.டி. சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment