Friday, July 15, 2011புலிகளின் செனல்4 ஆவணப்படம் அமெரிக்க செனட்டர்களுக்கு காண்பிக்கப்பட உள்ளதாககத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச அனர்த்தக் குழு உள்ளிட்ட சில அமைப்புக்கள் கூட்டாக இணைந்து சனல்4 ஆவணப்படத்தை அமெரிக்க செனட்டர்களுக்கு காண்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.
வொஷிங்டன் டி.சி.யின் இன்றைய தினம் குறித்த ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆவணப்படம் காட்சிப்படுத்துவதற்கு மன்னர் அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் ஜிம் மெக்ரோவன், மனித உரிமை ஆணைக்குழுவின் டொம் லென்டோன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
ஆவணப்படம் காட்சிப்படுத்தியதன் பின்னர் அமெரிக்க செனட்டர்கள் மற்றும் காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் நிபுணர் குழு அறிக்கை, குற்றச் செயல்கள் மற்றும் விசாரணைகள் குறித்து கலந்துரையாடுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment