Monday, September 2, 2013

முஸ்லிம்கள் விடயத்தில் நவிப்பிள்ளையின் நீதி; TNA முஸ்லிம் வாக்குகளை சூறையாடுவதற்கான திட்டமா?: எல்.எஸ். ஹமீட்!

Monday, September 02, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக யாரும் பேச முன்வரவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பே முஸ்லிம்களின் பிரச்சினைகளை முன்வைத்தது என்று கூறியிருப்பது, முஸ்லிம்களை தி்ட்டமிட்டு திசை திருப்புகின்ற ஒரு நடவடிக்கையாகும் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
“இந்த விடயம் முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்கின்ற முயற்சியாகும். ஏனெனில், நவி்ப்பிள்ளை இலங்கை வருவதற்கு முன்பே இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் காரியாலயத்தை தொடர்பு கொண்டு எமது கட்சிக்கு நேரம் ஒதுக்கித்தருமாறு நாம் கேட்டபொழுது கட்சி ரீதியாக யாரையும் நவிப்பிள்ளை சந்திக்கவில்லை.என்றும் அதனால் நேரம் ஒதுக்க முடியாது என்றும் சிவில் சமூகப்பிரதி நிதிகளை மாத்திரமே அவர் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வட கிழக்கில் அதிலும் குறிப்பாக வடக்கில் தமிழர்களைப் போன்று முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டடிருந்தார்கள் மட்டுமல்லாமல் 22 வருட காலம் அகதி வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றார்கள். எனவே அம்மக்களின் பிரதிநிதி என்ற வகையில் அமைச்சர் றிஷாட் பதியுதின் அவரைச் சந்திக்க வேண்டும் என்று தெரிவித்த பொழுது அவர்கள் அதற்கும் சம்மதிக்கவில்லை.
அவ்வாறு நேரம் வழங்க மறுத்து விட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சியாக இருந்த பொழுதும் அவர்களை மாத்திரம் சந்தித்ததற்கான பின்னணி எமக்குப் புரியவில்லை.

அமைச்சர் றவூப் ஹக்கீம் கூட நீதி அமைச்சர் என்ற முறையில்தான் சந்திக்கப்பட்டாரே ஒழிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் சந்திக்கப்படவிலலை. அதனால்தான் அவரும் “எல்லாம் நலமே” என்று கேட்டு தப்பித்துக்கொண்டார்.

அதேநேரம் சிவில் சமூகப்பிரதிநிதிகள் என்ற போர்வையில் திருகோணமலையில் வைத்து முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக மகஜர் கையளித்ததாக கூறுபவர்கள் வடக்கில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை பல வழிகளில் தடுக்க முயன்றுகொண்டிருக்கின்ற தமிழ் தேசிய கூட்மைப்பில் போனஸ் ஆசனமும் அமைச்சுப் பதவியும் கிடைக்கும் என்ற நப்பாசையில் இணைந்து போட்டியிட்டுக் கொண்டு அவர்களை துதிபாடிக் கொண்டிருக்கின்றவர்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்நிலையில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதற்கு முஸ்லிம்கள் யாரும் முன்வரவில்லை. என்று தெரிவிக்கப்பட்டிருப்பது முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள் மறைப்பது மாத்திரமல்ல, தமிழ் தேசிய கூட்டமைப்பினரே முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பேசினார்கள் என்ற ஒரு பிரச்சாரத்தைச் செய்து வட மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்களைத் திசை திருப்புவது இதன் உள்நோக்கமா ? என்றும் எண்ணத் தோன்றுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

ஒலுவில் துறைமுக திறப்பு விழா தொடர்பில் அமைச்சர் ; ரோஹிதவுடன் ஹக்கீம் குழுவினர் சந்திப்பு!

Monday, September 02, 2013
இலங்கை::ஒலுவில்  துறைமுக நிர்மாணத்தினால் பாதிககப்பட்ட அப்பிரதேச மக்கள்  எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி சம்மந்தப்பட்ட அமைச்சருக்கும், துறைமுக அதிகார சபை தலைவருக்கும் எடுத்து விளக்கி, அவற்றுக்குரிய தீhவுகளை காணும் பொருட்டு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் சனிக்கிழமை ஒலுவில் துறைமுக சுற்றுலா விடுதியில் நடைபெற்றது.

அமைச்சர் ஹக்கீமின் அழைப்பை ஏற்று துறைமுக அபிவிருத்தி அமைச்ச ரோஹித அபயகுணவர்த்தன, துறைமுக அதிகாரசபையின் தலைவர் கலாநிதி பந்து விக்கிரம ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டதோடு மற்றும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் பங்குபற்றினர்.

இக்கலந்துரையாடலின்போது மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், , கடலரிப்பினால் எதிர்நோக்கப்பகின்ற பிரச்சினைகள், பாதையொன்று மூடப்பட்டுள்ளதால் மீனவர்களும் ஏனைய பொரு மக்களும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் போன்றன விரிவாக ஆராயப்பட்டன.
குறிப்பாக மீனவர் வாடிகள் பற்றியும் வள்ளங்களை நிறுத்தி வைப்பதற்கான இடம் பற்றியும் அமைச்சர் ஹக்கீம் விபரித்துக் கூறினார்.

சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான மதிப்பீட்டறிக்கை மற்றும் அவற்றின் உரிமை குறித்த சர்ச்சைகள் என்பனவே இழப்பீடுகளை வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தியதாக அமைச்சராலும், துறைமுக அதிகார சபைத் தலைவராலும் தெரிவிக்கப்ப்டடது.

இது தொடர்பில் பிரதேசச் செயலாளர், துறைமுக அதிகாரசபை அதிகாரிகள், மீன்பிடித் தணைக்கள அதிகாரிகள் ஆகியோர் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

துறைமுகத்தால் பாதிப்புக்குள்ளான மீனவர்களுக்கான இழப்பீடு இரண்டு வருடங்களுக்கு மாத்திமே வழங்கப்பட்டதாகவும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு இழப்பீடு வழங்கும் காலத்தை நீடிப்பது பற்றி கருத்திற்கொள்ளுமாறும் அமைச்சர் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தார்.
துறைமுக அமைச்சும் மீன்பிடி அமைச்சும் கூட்டாக ஓர் அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவைக்கு சமர்;பிப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் பிரதேசச் செயலாளர் ஐ.எம். ஹனீபா, கரையோரப் பாதுகாப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம். ஜசூர் அமைச்சர் ஹக்கீமின் சட்ட ஆலோசகரும் இணைப்புச் செயலாளருமான சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மான் ஆகியோரும் சலந்து கொண்டனர்.
பின்னா அவர்கள் ஒலுவில் துறைமுகத்தைச் சென்று பார்வையிட்டனர்.
 

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: அமைச்சர் விமல் வீரவன்ஸ!

Monday, September 02, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

கண்டி செங்கடகல பௌத்த கலாசார நிலையத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறினார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான உந்து சக்தியை கொடுத்துள்ளார்.

ஆயுதங்களை கையில் எடுத்தால், சமஷ்டி அதிகாரத்திற்கு அப்பால் சென்ற அதிகாரத்தை பெறமுடியும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் அண்மையில் தெரிவித்தார்.

(புலி)கூட்டமைப்பின் இந்த நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் புலனாய்வு பிரிவினரும், இரகசிய பொலிஸாரும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.


பிரபாகரன் உட்பட புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்ட நந்திகடல் பகுதியில் மலர் வைக்க முயற்சித்ததிலிருந்து “பிள்ளை”யின் சுயரூபம் தெளிவாகியுள்ளது: அமைச்சர் விமல் வீரவன்ஸ!

முப்பது வருடங்கள் நாட்டை பீடித்த யுத்தத்தை ஜனாதிபதி முடிவுக்கு கொண்டு வந்ததால், அதனை சகிக்க முடியாத வெளிநாட்டு சக்திகள் ஐநாவின் போர்வையில் இலங்கை சீண்டி வருவதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

கண்டி பூஜாப்பிட்டிய நகரில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவிததார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இங்கிலாந்தில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றை வெள்ளையர்கள் தீயிட்டுள்ளனர். அச்சம்பவத்தின் போது அந்நாட்டு முஸ்லிம்கள் பொறுமையாக இருந்ததற்கு பொலிஸார் முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் நாடுகளுக்கு செல்லாமல் ஐ.நா.வின். மனித உரிமை ஆணையாளர் இங்கு வருவது நியாயமா?.
முப்பது வருடங்கள் எம்மை பீடித்த யுத்தத்தை ஜனாதிபதி முடிவுக்கு கொண்டு வந்தார். இதனை சகிக்க முடியாத வெளிநாட்டு சக்திகள் ஐநாவின் போர்வையில் எமது நாட்டை சீண்டுகின்றன.

ஐநாவின் மனித உரிமைகள் பிரிவின் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு வந்து நாங்கள் பெற்ற யுத்த வெற்றியை திசை திருப்ப முயற்சிக்கினறார்

பிரபாகரன் உட்பட புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்ட நந்திகடல் பகுதியில் மலர் வைக்க முயற்சித்ததிலிருந்து “பிள்ளை”யின் சுயரூபம் தெளிவாகியுள்ளது.

2015 அல்லது 2016 ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது ஸ்திரமற்ற ஒரு அரசாங்கத்தை உருவாக்கி தமிழ் தேசிய (புலி)
கூட்டமைப்பின் பணயக்கைதியாக்கி யுத்தத்தால் பெற முடியாது போனதை அரசியல் மூலம் பெற்றுக் கொடுக்க சர்வதேச சக்திகள் கடுமையாக பாடுபட்டு வருகின்றன என்றார்.
 

புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக நேபாளத்தின் மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் புஷ்ப கமல் தஹால் தெரிவித்துள்ளார்.!

Monday, September 02, 2013
காத்மண்டு;;புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக நேபாளத்தின் மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் புஷ்ப கமல் தஹால் தெரிவித்துள்ளார்.
 
நேபாளத்தில் ஒரு தசாப்த காலமாக நீடித்த கிளர்ச்சிகளின் போது புலிகளுடன் தொடர்புகளை பேணியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
நேபாள மாவோயிஸ்ட்கள்,  புலிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
2008ம் ஆண்டு நேபாளத்தின் பிரதமராக தஹால் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
காத்மண்டு நகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
முதல் தடவையாக தமது கட்சி புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக பகிரங்கப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
புலிகள் இன விடுதலைக்காக போராடியதாகவும் அதன் அடிப்படையில் தொடர்புகளை நியாயப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
சில சந்தர்ப்பங்களில்  புலிகள், மவோயிஸ்ட்களின் உதவியைப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
புலிகள் இயக்கம் மிகவும் தைரியமான இயக்கம் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
 
அடக்குமுறைகளுக்கு எதிராக புலிகள் போராட்டம் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
 
எவ்வாறெனினும், புலிகளிடமிருந்து எவ்வாறான உதவி பெற்றுக் கொள்ளப்பட்டது என்பது பற்றிய துல்லியமான விபரங்களை வெளியிடவில்லை.

வட மாகாணத்தில் 10,000 தமிழ் பொலிஸாரை புதிதாக இணைத்துக் கொள்வதற்கான கோரிக்கை: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, September 02, 2013
இலங்கை::வட மாகாணத்தில் 10,000 தமிழ் பொலிஸாரை புதிதாக இணைத்துக் கொள்வதற்கான கோரிக்கையை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்துள்ளார்.
 
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி அவர்கள் முதற்கட்டமாக பொலிஸ் சேவைக்கு 5,000 தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத் துக்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளார்.விரைவில் வட மாகாணத்தில் முதற்கட்டமாக 5,000 தமிழ் பொலிஸாரு க்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. ஆர்வமுள்ள தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்ள முடியும்.
 
எனவே அதனை வேலைவாய்ப்பாக மட்டும் கருதாமல் தமிழ் மொழி மூலமாக எமது மக்கள் தமது முறைப்பாடுகளை செய்வதற்கும், உதவிகளைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்கின்ற அசெளகரியங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்கு இந்த வாய்ப்பை எமது இளைஞர், யுவதிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐ. நா. வின் மனித உரிமைகள் ஆணையர் நவிபிள்ளை வெளிப்படுத்தியுள்ள கருத்து ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான்: கெஹலிய ரம்புக்வெல்ல!

Monday, September 02, 2013
இலங்கை::ஐ. நா. வின் மனித உரிமைகள் ஆணையர் நவிபிள்ளை வெளிப்படுத்தியுள்ள கருத்து ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான் என்றும் இலங்கையில் எதேச்சாதிகாரம் நடைமுறையில் இல்லை என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நவி பிள்ளை இலங்கை எதேச்சாதிகார பாதையில் செல்வதாகக் கருத்துக் கூறியிருக்கிறார்.

இதனைவிட வேறு வகையான நிலைப்பாட்டை இங்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை. காற்று எந்தப் பக்கம் வீசுகிறது என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார். 30 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் பிடியில் இருந்த வடக்கில் இன்று மக்களுக்கு தேர்தல் என்ற வார்த்தையை யாவது கேட்பதற்கு உரிமை கிடைத் திருக்கிறது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இங்கு தேர்தல்கள் நடக்கின்றன.  அரசியலமைப்பின் கட்டமைப்புக்கு வெளியில் எதுவும் நடக்கவில்லை. பலமான பாராளுமன்றம் இருக்கிறது. பெரும்பான் மையான மக்களின் பங்களிப்புடன் அரசியல் நடக்கிறது என தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்துக்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலொன்றின் வெளிப்பாடு தான் என்றும் கூறினார்.

புலிபயங்கரவாதத்தின் மூலம் இந்த நாட்டின் ஸ்திர தன்மையை சீர்குலைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன. அவை தோல்வியடைந்தாலும் சர்வதேச மட்டத்தில் தொடர்ந்தும் முன்னெடுக்கப் பார்க்கிறார்கள்.  புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களின் கருத்துக்களை இன்னும் முன்னெடுத்துச் செல்லும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். யுத்த காலத்தில் சர்வதேச அழுத்தங்களை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொண்டதோ அதேபோலவே இப்போதும் பதில் நடவடிக்கை அமையும் என்றும் அவர் கூறினார். 

புலிகளுடனான போரின்போது சர்வதேச அமைப்புகள் எவ்வளவு நெருக்குவாரங்களை கொடுத்தன. முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதியும் மக்களின் ஆணைபெற்ற கட்சியின் அரசாங்கம் என்ற வகையில் திடமான முடிவுகளை எடுக்காமல் சர்வதேச மட்டத்தில் உள்ள சிலரை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்தால் நாட்டில் இன்னும் யுத்தம் முடிந்திருக்காது.  இதேவேளை நாட்டு மக்களினது அனைத்து விதமான உரிமைகளையும் கடமைகளையும் அரசாங்கம் தற்போது முன்னெடுத்துச் செல்லும் இவ்வேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை அடக்கு முறையான நாடொன்றாக மாறுவதாகக் கூறும் பசப்பு வார்த்தை நாட்டு மக்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் ஒரு செயலாகும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று (01) கண்டியில் தெரிவித்தார்.

மனித உரிமை ஆணையாளரினால் எந்தவொரு ஆதாரமற்ற முறையில் அவ்வாறு ஒரு கருத்தை தெரிவிப்பதையிட்டு நாம் கவலைப்படும் அதேவேளை, இக்கருத்து தொடர்பில் அரசாங்கத்துக்கு தற்போது பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். கண்டி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஒன்று கூடலொன்று நேற்று கண்டி ஒக்ரே ஹோட்டலில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்து பேசுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தொடர்ந்து அங்கு கூறும் போது, அவ்வாறு நவநீதம்பிள்ளை கூறியிருக்கும் கருத்தை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. அரசியல் யாப்புக்கமைய அரசியல் விவகாரங்கள் சரியான முறையில் இடம்பெறுகின்றன. அது போன்று தேர்தல் முறைகள் சரியான முறையில் இடம்பெற்று வருகின்றன. சகல விடயங்களும் ஒழுங்கான முறையில் அரசு நடைமுறைப்படுத்தி வரும் இவ்வேளை, அவ்வாறு ஆணையாளர் தனது மனதுக்கு வந்தது போல் கூறுவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ள ஆணையாளர் அங்கு இடம்பெற்றுள்ள அபிவிருத்தி, புனர்வாழ்வு, தொழில்வாய்ப்பு, மீள்குடியேற்றம், நீதியான தேர்தல் போன்ற விடயங்கள் குறித்து அரசாங்கத்தை பாராட்டியுள்ள அவர் அதேவேளை, இவ்வாறு இலங்கையில் ஏகாதிபத்திய அடக்கு முறையான கலாசாரமாக மாறும் நிலை ஏற்பட்டிருப்பதாக கூறியிருப்பது குறித்து கவலையடைகின்றோம்.அரசாங்க தகவல் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள பல ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். ஊடகம் தொடர்பான விளக்கவுரைகள் அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆர். ஆரியரத்ன அத்துக்கல மற்றும் பணிப்பாளர் வசந்த பிரிய ராமநாயக்க ஆகியோர்களினால் வழங்கப்பட்டன.