Thursday, April 30, 2020

'கொரோனாவால் கியூபா லாபம் ஈட்டுகிறது': அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு!

மருத்துவ பணிகளில் சிறப்பாக செயல்படும் நாடாக கியூபா அறியப்படுகிறது. அதேவேளையில், பல சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கியூபாவின் மருத்துவ சிகிச்சைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், 'கியூபாவிடம் இருந்து உலகின் எந்த நாடுகளும் மருத்துவ உதவிகளை பெற வேண்டாம்' என, அறிவுறுத்தியுள்ளார்.
 
இந்நிலையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்குச் சிகிச்சையளிக்க, பல்வேறு நாடுகளும் கம்யூனிஸ்ட் நாடான கியூபாவிடம் உதவிகள் கோரி வருகின்றனர். உதவி கோரிய அனைத்து நாடுகளுக்கும் மருத்துவர்களை அனுப்பி

Monday, April 27, 2020

கோவையில் இருந்து நேற்று 113 பேர் இலங்கை பயணம்!

முழு ஊரடங்கு காரணமாக, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் மீண்டும் தங்கள் நாட்டுக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இச்சூழலில் இலங்கையை சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் உட்பட, நுாற்றுக்கும் மேற்பட்டோர் தமிழகம், கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் தங்கியிருப்பது தெரிந்தது. இவர்கள் தங்களின் சொந்த நாட்டுக்கு அழைத்
து செல்லுமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, இலங்கையில் இருந்து, 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமானம் கோவை சர்வதேச விமான நிலையம் வந்தது. இந்த விமானத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட, 113 பேர் நேற்று

Sunday, April 26, 2020

பேஸ்புக்கில் இனி 50 பேர் வரை வீடியோ சாட் செய்யலாம்!

ஜூம் செயலிக்கு போட்டியாக, காலவரை எதுவுமின்றி 50 பேர் வரை வீடியோ அழைப்பில் உரையாட கூடிய வகையில், ‛மெசஞ்சர் ரூம்ஸ்' என்ற புதிய வசதியை பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் முடங்கியுள்ள மக்கள் கடந்த 2 மாதங்களாக அதிகளவில் ஜூம், ஸ்கைப் போன்ற வீடியோ அழைப்பு செயலியை பயன்படுத்தி வந்தனர். ஆனால் ஜூம் செயலியில் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக புகார் எழுந்ததால் கூகுள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் ஜூம் செயலியை பயன்படுத்த தடை விதித்திருந்தன. இந்நிலையில், ஜூம் செயலிக்கு மாற்றாக பேஸ்புக் தனது புதிய மெசஞ்சர் ரூம்ஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தில் இன்று 66 பேர் புதிதாக கொரோனா - மேலும் 1821 பேருக்கு கொரோனா; 23 பேர் பலி!

தமிழகத்தில் இன்று  மேலும் 66 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்கள். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1821 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு நபர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 23 ஆனது.தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 66 பேருக்கு கொரோ
னா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 38 ஆண்களும், 28 பெண்களும் அடங்கும். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1821 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பரிசோதனை மையங்கள் எண்ணிக்கை 34ல் இருந்து 41 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 7,707 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

Friday, April 24, 2020

கொரோனாவை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு ஏற்படும் நிதி பற்றாக்குறை!

 கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் மையமாக மாறியுள்ள அமெரிக்காவில் இதுவரை, 8.90 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 50,363 பேர் உயிரிழந்துள்ளனர். 82,112 பேர் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக, அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, அமெரிக்காவில் ஊரடங்கு அமலி
ல் உள்ளது. அனைத்து தொழிற்சாலைகளும், தொழில்நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன; பல கோடி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். கொரேனாவை எதிர்கொள்ளவும், அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார

Thursday, April 23, 2020

மகிழ்ச்சியான செய்தி - இங்கிலாந்து, ஜெர்மன் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது, இன்று மனிதர்களுக்கு பரிசோதனை!

கொரோனா தடுப்பு மருந்தை கண்டு பிடிக்க உலக நாடுகள் போட்டி போட்டு ஆய்வு செய்தாலும், இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்களைக்கழகத்தின் உயிரியல் ஆய்வாளர்கள் கொரோனா தடுப்பு மருந்தை விலங்குகளுக்கு செலுத்தி வெற்றி கண்டனர். இதையடுத்து இன்று தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தி பரிசோதனை செய்ய உள்ளனர்.
இன்றய பரிசோதனைகள் வெற்றி பெற்றால் உடனடியாக மனித குலத்திற்கு பயன்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
 
ஜெர்மனியில் உள்ள பால் எர்லிச் ஆய்வு நடுவம் கண்டு பிடித்த கொரோனா தடுப்பு மருந்தை இன்று அல்லது நாளை மனிதர்களுக்கு செலுத்தி ஆய்வு செய்கிறது என்ற செய்தி ஜெர்மன் மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
 

ஈரான் படகுகளை சுட்டு வீழ்த்த அதிபர் டிரம்ப் உத்தரவு!

அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் துப்பாக்கி ஏந்திய ஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்த அமெரிக்க கடற்படைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது: கடலில், அமெரிக்க கப்பல்களுக்கு இடையூறு ஏற்படுத்தும், துப்பாக்கி ஏந்திய ஈரான் படகுகளை தாக்கி அழிக்கும்படி,அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

ஜெர்மனியில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்கு ஒப்புதல்!


கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பூசி மருந்துக்கான முதல் மருத்துவ பரிசோதனைக்கு ஜெர்மனியில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அந்நாட்டின் ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது.கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோயை கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய்க்கு தடுப்பூசி / தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க உலகில் சுமார் 86 மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு போராடி வருகிறது. ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசிக்கான முதல் மருத்துவ பரிசோதனைக்கு ஒப்புதல் அளித்ததாக அந்நாட்டின் ஒழுங்குமுறை அமைப்பு அறிவித்துள்ளது.

Wednesday, April 22, 2020

அதிர்ச்சியில் அமெரிக்கா! இத்தாலி, ஸ்பெயினைவிட அமெரிக்காவில் பலி 2 மடங்கு அதிகமாகி உள்ளது!

இத்தாலி, ஸ்பெயினைவிட அமெரிக்காவில் பலி 2 மடங்கு அதிகமாகி உள்ளது. உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
உலகில் கொரோனாவால் அமெரிக்காவில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு உலகில் அதிக பலி ( 45, 343 பேர் ) ஏற்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக இத்தாலி (24,648 பேர் ) ,ஸ்பெயின் (21,282 பேர் ), பிரான்ஸ் (20,796 பேர் ) , பிரிட்டன் (17, 337) , பெல்ஜியம் (5,996 பேர் ) பலியாகி உள்ளனனர்.
கொரோனா துவக்கத்தில் சீனாதான் அதிக பாதிப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கு 4,632 பேர் பலியாகினர். இந்தியாவில் 640 பேர் பலியாகி உள்ளனர்.

Tuesday, April 21, 2020

கொரோனா வைரஸ் பரவ துவங்கியதில் இருந்து அமெரிக்காவிடம் எதையும் மறைக்கவில்லை: உலக சுகாதார நிறுவனம்!

கொரோனா வைரஸ் பரவ துவங்கியதில் இருந்து எச்சரிக்கை விடுத்து வருவதாகவும், அமெரிக்காவிடம் இருந்து எதையும் மறைக்கவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு சீனாவின் வூஹானில் இருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 24 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 1.70 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். எந்தவொரு நாட்டை விடவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் இதுவரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 8 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றை கையாள்வதில் டிரம்ப் மீது விமர்சனங்கள்

Monday, April 20, 2020

சீனாவில் கொரோனா குறித்த உண்மையை வெளியே சொல்ல முயற்சிப்பவர்கள் காணாமல் போகும் கொடூரம் - ஒரு உயிர் பறிபோனது!

சீனாவில் இருந்து வரும் தகவல்கள் அனைத்தும் அந்த அரசால் மட்டுமே வழங்கப்படுகிறது அல்லது அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், கொரோனா வைரஸ் தோன்றிய வுஹானின் உண்மை நிலை என்ன என்பது யாருக்கும் தெரியாத மர்மமாக உள்ளது.வுஹானில் உண்மையில் என்ன நடக்கிறது என வெளி உலகுக்கு தகவல் கூறி வந்த சீன வழக்கறிஞர் சென் கிஷி கடந்த இரண்டு மாதங்களாக காணவில்லை. அதே போல, உண்மை நிலவரத்தை வெளியிட்டு வந்த முன்னாள் பல்கலைக்கழக ஆசிரியர் சூ சியாங், பெரு வியாபாரி ரென் சிகியாங் ஆகியோரையும் காணவில்லை.

இன்று நிலவரப்படி உலகம் முழுவதும் 23 லட்சத்து 99 ஆயிரத்து 129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்!

இன்று நிலவரப்படி உலகம் முழுவதும் 23 லட்சத்து 99 ஆயிரத்து 129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 02 பேர் பலியாகி உள்ளனர். 6 லட்சத்து 14 ஆயிரத்து 202 பேர் மீண்டனர்.
இத்தாலியில் கொரோனாவுக்கு 125 டாக்டர்கள் பலி! இத்தாலியில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களில், 125 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.ஐரோப்பிய நாடான இத்தாலியில், 6 கோடி பேர் வசிக்கின்றனர். தற்போது அங்கு, பாதிப்பு குறைந்து வருகிறது.இத்தாலியில், கொரோனா தாக்கி, 23,227 பேர் பலியாகியுள்ளனர். 1,75,925 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், அங்கு புதிதாக 3,491 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 482 பேர் பலியாகினர்.

கொரோனா வைரஸ் நோய் முகக்கவசத்தை அணியும்போது செய்யக்கூடாத தவறுகள்!

கொரோனா வைரஸ் நோய் தொற்று தற்போது 200 க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் தும்மல், இருமல் வழியேதான் அதிகமாக பரவுதாக சுகாதராத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், மிக எளிதாக ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு இந்த வைரஸ் பரவ கூடும்.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அதன் பிறகு, வறட்டு இருமலை உண்டாகி, ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கிறது.இந்த வைரஸால் தாக்கப்பட்ட நான்கில் ஒருவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைவதாக தெரிகிறது. இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா உள்ளிட்டவையும், அதிகபட்சமாக உயிரிழப்பும் ஏற்படுகிறது.
மாஸ்க்கின் முக்கியத்துவம்