Wednesday, July 3, 2019

தூக்குத் தண்டனைத் தீர்மானத்துக்கு ஆதரவு: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி!

தூக்குத் தண்டனைத் தீர்மானத்துக்கு ஆதரவு: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி! போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு எதிராக ஒரு குழு முன்னிற்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
 
நாடு முழுவதிலுமுள்ள மக்களை அழிக்கும் போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிராகவுள்ளதாக அறிவிப்புச் செய்துள்ள நிலையில், ஜனாதிபதியின் தீர்மானத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வரவேற்கின்றது எனவும் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment