Wednesday, June 26, 2019

கண்டியில் ஹக்கீமிற்கு பத்து விகித முஸ்லிம்கள் கூட வாக்களிக்கவில்லை: எஸ்.பி.திசாநாயக்க!

நாட்டில் தற்பொழுது முஸ்லிம்கள் சார்பாக எழுந்துள்ள பிரச்சனைகளை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் ஹக்கீம், இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களை ஏனைய அரசியல் கட்சிகளிடமிருந்து வேறாகப்பிரித்து தனது அரசியலினை இஸ்தீரப்படுத்திக்கொள்வதற்கான முயற்சியிலேயே கச்சிதமாக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றார். இந்த செயற்பாட்டினையே ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணிலும் திரை மறையிலிருந்து ஹக்கீமினை செயற்படுத்திக் கொண்டிருக்கின்றார்.
ஆனால், முஸ்லிம் காங்கிரசினை இஸ்தாபித்த மறைந்த எம்.எச்.எம்.அஸ்ரஃப், ஹக்கீமைப் போன்று இந்நாட்டு முஸ்லிம்களை ஏனைய சமூகத்திடமிருந்தோ அல்லது பெரும்பான்மைக் கட்சிகளிடமிருந்தோ தனது சுய அரசியலுக்காகப் பிரித்தெடுக்கும் முயற்சியில் ஒரு பொழுதும் செயற்பட்டதில்லை. மறைந்த அஸ்ரஃப் முஸ்லிம் காங்கிரஸ் எனும் தனிக்கட்சியினை உருவாக்கியது கூட ஜே.ஆரினுடைய அரசாங்கத்தில் 1988ம் ஆண்டு புலிகள் மற்றும் தமிழ் கட்சிகளின் ஆதரவுடன் இந்நாட்டு முஸ்லிம்கள் ஓரங்கட்டப்பட்ட நிலையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இரவோடிரவாக வடகிழக்கு இணைக்கப்படதிலாகும்.
 
அன்று ஐக்கிய தேசியக்கட்சியில் அங்கம் வகித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஜே.ஆரினுடைய சர்வதிகாரத்தினைப் பார்த்தவாறு வாய் மூடி பொம்மைகளாகவே இருந்தார்கள். குறித்த திட்டமிடப்பட்ட துர்ப்பாக்கிய நிலையினை தூரநோக்கோடு பார்த்த மறைந்த அஸ்ரஃப், முஸ்லிம்களுக்காக தனியான அரசியல் கட்சியின் தேவைப்பாட்டை உணர்ந்தே முஸ்லிம்களுக்கான தனிய முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியினை இஸ்தாபித்தார்.
ஆனால், ஹக்கீம் தற்பொழுது தனது சுயநல அரசியலுக்காகவும், ரணிலினைப் பாதுகாப்பதற்காகவும் அஸ்ரஃப் உருவாக்கிய கட்சியினைப் பயன்படுத்தி இந்நாட்டு முஸ்லிம்களை ஏனைய கட்சிகலிடமிருந்தும் ஏனைய மூகத்திடமிருந்தும் பிரித்தெடுக்கும் செயற்பாட்டில் மிகக்கச்சிதமாக செயற்பட்டு வருகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநா
யக்க ஹிரு தொலைக்காட்சியில் இடம்பெற்ற சலகுண சிங்கள அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
மேலும் தனது கருத்தினைத்தெரிவித்த எஸ்.பி.திசாநாயக்க,
அன்று பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்ட வேலையில், ஜே.ஆரைப்பார்த்தோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியிடமோ அக்கட்சியில் அங்கம் வகித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு வசனம் கூட கதைக்கவில்லை. அதிலும், முக்கியமாக சிங்களவர்களின் தூண்டுதலாலேயே அந்த இடத்தில் தற்காலியமாக இணைக்கப்பட்டு, வடகிழக்கில் வாழுகின்ற மூவின மக்களினதும் விருப்பத்தினை அறிந்து கொள்ளும் பொருட்டு சர்வசன வாக்கெடுப்பாவது நடாத்தப்பட வேண்டுமென்ற முடிவு கூட எட்டப்பட்டத்து. அந்த நேரத்தில் வடகிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் தங்களது எதிர்காலம் தொட்டும் அடிப்படை உரிமைகளை நினைத்தும் பெரும் அச்சத்துக்கும், மனவுளைச்சலுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தார்கள் என்பதனை எவரும் மறுக்க முடியாது.
 
இந்நிலையில் தான் அஸ்ரஃப் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேவைப்பட்டினை உணர்ந்து செயற்படத்தொடங்கினார். ஆனால், அவர் முதலாவது பாராளுமன்றத் தேர்தலுக்குப்பிற்பாடு முஸ்லிம்களைப் பெரும்பான்மைச் சமூகத்திடமிருந்தோ அல்லது ஏனைய கட்சிகளிடமிருந்தோ முஸ்லிம் காங்கிரஸ் எனும் தனிப்பெயரினை இனத்தால் பிரித்து தூரமாக்கி விடக்கூடாதென்பதனை உணர்ந்தவராக சகல சமூகத்தினரையும், சக கட்சிகளையும் உள்வாங்கும் தூரநோக்கு சிந்தனையோடு தேசிய ஐக்கிய முன்னணி அல்லது ஜாதிக்க சமக்கி சந்தானே.( NUA) எனும் கட்சியினை ஆரம்பித்தார். அந்த கட்சிக்குள்ளேயே முஸ்லிம் காங்கிரசனை உள்ளெடுத்து இலங்கையிலுள்ள சகல இனத்னறையும் ஒருக்கிணைத்த அரசியலை மேற்கொள்வதே அவருடைய அருமையான திட்டமாக இருந்தது. அவருடைய மறைவிற்குப் பின்னர் அவருடைய பாரியார் அக்கட்சியிலேயே போட்டியிட்டார்.
அவருக்குப்பின்னர் முஸ்லிம் காங்கிரசினை கையிலெடுத்த ஹக்கீம், இந்நாட்டு முஸ்லிம்களை ஏனைய
 
சமூகத்திடமிருந்து பிரித்து தனது அரசியலினைப் பாதுகாத்து வருகின்றார். ஆனால், அவரால் இந்த நாட்டில் வாழும் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் பத்து விகித வாக்குகளைக்கூடப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையேயுள்ளது. கண்டியில் என்னுடன் போட்டியிட்ட ஹக்கீம் நான் பெற்றுக்கொண்ட முஸ்லிம் வாக்குகளில் பத்து விகிதம் கூட அவரால் பெற்றுக்கொள்ள முடியாமல் போனதை வைத்து பார்க்கும் பொழுது, அவருக்கு முஸ்லிம்கள் மத்தியிலிருக்கும் தற்போதைய செல்வாக்கு என்னவென்பதை அறிந்து கொள்ள முடியும் எனத்தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க.

No comments:

Post a Comment