எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி இணைந்துள்ளது.எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று
இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே
அக்கட்சியின் செயலாளர் சதாசிவம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இரு கட்சிகளும் இணைந்து தனது எதிர்கால அரசியல் பயணத்தை முன்னெடுத்து செல்லவுள்ளதாக அவர் தெரிவித்தார்.அத்தோடு எதிர்வரும் பொதுத்தேர்தலில்
பொதுஜன பெரமுன
சார்பில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளராக களமிறங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.இதேவேளை சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சார்பில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளராக களமிறங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.இதேவேளை சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment