Friday, June 28, 2019

இன்று டிரம்ப்-மோடி சந்திப்பு: வரி விவகாரத்திற்கு தீர்வு!

ஜி- 20 நாடுகளின் உச்சி மாநாடு நடக்கும் நிலையில் இன்று அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பை இன்று சந்தித்து பேசுகிறார் பிரதமர் மோடி. இதில் வரி விவகாரம் குறித்து டிரம்ப் வலியுறுத்துவார் என தெரிகிறது.
ஜி - 20 நாடுகளின் கூட்டம், கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின், ஒசாகா நகரில் நடக்கிறது. இரண்டு நாள் நடக்கும் இந்தக் கூட்டத்தில், ஜி - 20 அமைப்பில் உள்ள, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.இந்த மாநாட்டுக்கு இடையே, உலகத் தலைவர்கள் தனித்தனியாக சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்தும், சர்வதேச பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க உள்ளனர்.

இதை தொடர்ச்சியாக பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்பை இன்று சந்தித்து பேசுகிறார். அப்போது அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இந்தியா திரும்பப் பெறுதல் விவகாரம் குறித்து மோடியிடம் டிரம்ப் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக டிரம்ப் தனது டுவிட்டரில் பதவிவேற்றியது, அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா அதிக வரிகளை விதித்துள்ளது. அண்மையில் மீண்டும் அதிக வரி விதிக்கப்பட்டது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிக வரி விதிப்பை இந்தியா திரும்பப் பெற வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment