Monday, June 3, 2019

பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவருக்கிடையில் இன்று சந்திப்பு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தையொன்று இன்று  திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. தாக்குதலுக்கு பின்னர் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை கட்டியொழுப்புவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
 
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை அலரிமாளிகையில் பிரசன்னமானார்.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் கிழக்கு, மேல் மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ்,அசாத்சாலி இருவரையும் பதவிவிலக்கக்கோரி நாடாளுமன்ற
உறுப்பினர் ரத்ன தேரர் கண்டி தலதா மாளிகையில் உண்ணாவிரதமிருந்துவரும் நிலையில் இந்தசந்திப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்தச் சந்திப்பில் மகிந்த தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேம ஜயந்த, உதய கம்மன்பில ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கும் இடையில் இன்று முற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றது.இந்த சந்திப்பு இன்று முற்பகல் 9.30 அளவில், அலரிமாளிகையில்  ஆரம்பமானதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், நிதியமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் ஹர்ச டி சில்வா மற்றும் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி மற்றும் நிதியமைச்சின் செயலாளர் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

அதன்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், மக்களுக்கு சலுகைகளை வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

No comments:

Post a Comment