Wednesday, June 12, 2019

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவையில் திடீர் சோதனை!

தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் சமூக வலைத்தளங்கள் வாயிலாக செய்தி பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் கோவையில் ஏழு இடங்களில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையோர் கேரளா மற்றும் தமிழகத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், கோவையைச் சேர்ந்த சிலர் இலங்கை குண்டுவெடிப்புக்கு ஆதரவாக கருத்து
பதிவிட்டதையும், அவர்கள் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுடன் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டதையும் அதிகாரிகள் கண்காணித்ததாகக் கூறப்படுகிறது.
 
இதன் அடிப்படையில் இன்று கோவை சென்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், உக்கடம், குனியமுத்தூர், போத்தனூர், அல் அமீன் காலனி, சுண்ணாம்பு கால்வாய், பொன் விழா நகர் உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 
6 பேரது வீடுகளிலும் ஒருவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனை காரணமாக அந்த இடங்களில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment