Tuesday, May 21, 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபயவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் தொடர்ந்திருந்த வழக்கினை, நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இந்த மாதம் 30ம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளது.

முன்னைய அரசாங்க காலப்பகுதியில், டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு நூதனசாலை நிர்மாணத்திற்கு 34 மில்லியன் ரூபாய் அளவான அரச நிதி பயன்படுத்தப்பட்டமைக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது. இதன்போது வழக்கை எதிர்வரும் 23ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்போது கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ம் திகதி முதல் ஜூன் மாதம் 02ம் திகதி வரை வைத்திய தேவைக்காக வௌிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு அவரது சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறாயினும் அதற்கு அரச தரப்பு சட்டத்தரணி எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், அது தொடர்பில் வரும் 23ம் திகதி ஆராய்ந்து பார்ப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் அன்றைய தினம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கும் திகதி தொடர்பான தீர்மானத்தை அறிவிப்பதாகவும் நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது. டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment