Friday, May 17, 2019

அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை :ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷெரீப்!

அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை,'' என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷெரீப் தெரிவித்துள்ளார்.2015 ல் ஈரான், ரஷ்யா, பிரான்ஸ், சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் செய்தது. கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதார தடைவிதித்தது.அதற்கு பதிலடியாக, எண்ணெய் வர்த்தக போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியில் தடை ஏற்படுத்துவோம் என்று மிரட்டல் விடுத்து வருகிறது. இதையடுத்து
இருநாடுகளுக்கும் இடையில் மோதல் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் எல்லையில் அமெரிக்கா போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் நிறுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.இதைத் தொடர்ந்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர், தங்களுடன் வர்த்தக உறவு வைத்திருக்கும் நாடுகளுக்கு சென்று வருகிறார். அதன்படி இந்தியா வந்திருந்தவர் தற்போது, ஜப்பான் சென்றுள்ளார். அங்கு பத்திரிகையாளர் சந்திப்பில், 'அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா' என்ற கேள்விக்கு, ''அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை,'' என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.இதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்னைக்கு இப்போதைக்கு தீர்வு இல்லை என்பது தெளிவாகிறது.
 

No comments:

Post a Comment