Wednesday, April 24, 2019

சவோய் திரையரங்கிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான மோட்டார்சைக்கிள் வெடிக்கவைக்கப்பட்டது!

வெள்ளவத்தை - சவோய் திரையரங்கிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளியொன்றை பரிசோதிப்பதற்காக அதன் ஆசனம் படையினரால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான உந்துருளியொன்று குறித்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் வழங்கிய தகவலை அடுத்து அதனை படையினர் பரிசோதனை செய்துள்ளனர்.

இதன்போது அதன் ஆசனத்தை திறப்பதற்காக வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், அதில் வெடி பொருட்கள் எவையும் இல்லை எனவும் காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.
 
வௌ்ளவத்தை செவோய் திரையரங்குக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனை செய்வதற்கே இந்த வெடிப்புச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளின் ஆசனத்தை திறக்க முடியாதிருந்ததால் அதனை வெடிக்கச் செய்ததாகவும், இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், அதில் வெடி பொருட்கள் எவையும் இருக்கவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment