Thursday, April 25, 2019

இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் குறித்து அமெரிக்கா முன்னதாகவே அறிந்திருக்க வில்லை - அமெரிக்கா!

இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் குறித்து அமெரிக்கா முன்னதாகவே அறிந்திருந்ததாக வெளியான தகவலை, அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மறுத்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் குறித்த முற்கூட்டிய தகவல்களை அமெரிக்கா அறிந்திருக்கவோ, இலங்கைக்கு வழங்கி இருக்கவோ இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இலங்கைக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்களை பகிர்வதில் இடைவெளியேற்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment