கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
காயமடைந்த மேலும் பலர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 60 சந்தேகநபர்கள் இதுவரையில் கைது!
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தற்போதைய நிலையில் 60 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
அந்த சந்தேகநபர்களில் 32 பேரிடம் தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரித்து வரும் நிலையில் , மேலும் 4 பேர் பயங்கரவாத விசாரணை பிரிவின் பொறுப்பில் உள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment