Friday, March 24, 2017

பிரிட்டன் பார்லி. அருகே தாக்குதலுக்கு : ஐ.எஸ்.பொறுப்பேற்பு!

ரிட்டன் பார்லிமென்ட் அருகே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் மீது தாக்குதல் நடத்திய நபரை, அந்நாட்டு போலீசார் சுட்டுக் கொன்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரிட்டனின் லண்டன் நகரில் உள்ள வெஸ்ட் மின்ஸ்ட
ர் பாலம் அருகே, நேற்று கையில் கத்தியுடன் வந்த மர்ம நபர், அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் மீது, துப்பாக்கியால் சுட்டான். இதையடுத்து, போலீசார் அவன் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அவன் பலியானான்.
 
இந்த பாலத்திற்கு மிக அருகில், அந்நாட்டு பார்லிமென்ட் அமைந்துள்ளதால், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும், பார்லிமென்ட் ஊழியர்கள் பீதியடைந்தனர்.இதையடுத்து, பார்லிமென்ட் கதவுகள் உடனடியாக மூடப்பட்டன. அப்பகுதியில் உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர். பிரதமர் மற்றும் பார்லிமென்ட் உறுப்பினர்கள் பத்திரமாக உள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
 
இந்த சம்பவத்தில், 12 பேர் காயம் அடைந்ததாக, தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் யார், எதற்காக இந்த தாக்குதல் நடந்தது என்பது குறித்து, அந்நாட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஆனாலும், பயங்கரவாத தாக்குதல் நடந்தால், அதை முறியடிக்க, எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படுமோ, அது போன்ற நடவடிக்கையை மேற்கொள்வதாக, பிரிட்டன் போலீசார் தெரிவித்தனர்.
 
இதற்கிடையே, கத்தியால் தாக்கிய மர்ம நபர், முன்னதாக காரில் வந்ததாகவும், சாலையோரத்தில் நடந்து சென்றவர்கள் மீது, அவன், காரை மோதியதாகவும் உறுதி  தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
லண்டன் நகரில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் பாலம் அருகே, மர்ம மனிதன் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் பலியாயினர் 12 பேர் காயம் அடைந்தனர். சுதாரித்த போலீசார் அவன் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அவன் பலியானான். பாலத்திற்கு மிக அருகில், அந்நாட்டு பார்லிமென்ட் அமைந்துள்ளதால், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும், பார்லிமென்ட் ஊழியர்கள் பீதியடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர். இ்ந்நிலையில் இத்தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. மேலும் பிரிட்டன் போலீசார் விசாரணை நடத்தி தாக்குதலுக்கு தொடர்புள்ளதாக 8 பேரை கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment