Monday, October 5, 2015

.ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கு எதிராக நாடாளுமன்றில் மஹிந்த ராஜபக்ச ஆதரவு அணி! பிரேரணை கொண்டுவரவுள்ளது!

Monday, October 05, 2015
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச  ஆதரவு அணியினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 
அமெரிக்கப் பிரேரணைக்கு இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கியதற்கு குறித்த பிரேரணையில் கடும் எதிர்ப்பை வெளியிடவுள்ள மஹிந்த ராஜபக்ச   ஆதரவு அணியினர், அதிலுள்ள அபாயங்களையும் பட்டியலிட்டுக் காட்டவுள்ளனர்.
 
நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. இதன்போதே மேற்படி பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.
 
பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி., தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ எம்.பி., ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ
 
நாணயக்கார எம்.பி., தூய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. ஆகியோர் இணைந்தே இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
 
பிரேரணையை வாசுதேவ நாணயக்கார சமர்ப்பிக்கவுள்ளார். எனினும், அரசு சபை இதை ஏற்குமா என்பது கேள்விக்குறியே. ஐ.நா. அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்துவதற்குக் காலம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளதால், அதனுடன் தொடர்புடைய மற்றுமொரு பிரேரணையை விவாதத்துக்கு எடுக்குமா என்பது கேள்விக்குறியே.
 
தனிநபர் பிரேரணையாக அதை கொண்டுவந்தாலும் விவாதத்துக்கு எடுப்பதற்கு நாள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment