Friday, September 25, 2015

தனக்கு நான்கு திருமணங்களைச் செய்ய முடியும்: அசாத் சாலி! - தனது மனைவியை அசாத்சாலி பலவந்தமாக வைத்திருக்கிறார்: மத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ்!

Friday, September 25, 2015
மதவிதிப் பிரகாரம் தனக்கு நான்கு திருமணங்களைச் செய்ய முடியும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் பி நான் யாரையும் பலவந்தமாக வீட்டில் கொண்டு வந்து வைத்திருக்கவில்லை. எனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்றால் மதவிதிப் பிரகாரம் மூன்று அல்ல நான்கு திருமணங்கள் செய்யலாம். எந்தவித பிரச்சனையும் இல்லை.
 
உவைஸின் மனைவியை விவாகரத்துக் கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். குறித்த விசாரணை இரண்டு கட்டங்களை அடைந்து எதிர்வரும் முதலாம் திகதி தீர்ப்பு வெளிவரவுள்ளது. அந்த நிலையில் அவர் அசாத் சாலி உங்களைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றால் எனக்கு அதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை.
 
நான் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றேன். இதனை ஊடகங்களுக்கும் தெரிவிப்பதில் விரும்பமடைகின்றேன்.
 
உவைஸின் மனைவி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று தன்னுடைய முடிவின் பிரகாரம் தான் செயற்படுவதாகவும் யாரும் தன்னை பலவந்தப்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவிடுமாறும் கோரியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
 
தனது மனைவியை அசாத்சாலி பலவந்தமாக வைத்திருக்கிறார்: மத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ்!
 
மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தனது மனைவியைக் கடத்தி வைத்திருப்பதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.உவைஸ்  தெரிவித்தார். நான்கு பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய தனது மனைவியை கடத்தி வைத்திருப்பது பற்றி விளக்கமளிப்பதற்காக 22.09.2015 செவ்வாய்க்கிழமை பம்பலப்பிட்டியில் நடத்தப்பட்ட செதியாளர் மாநாட்டிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
மாகாண சபை உறுப்பினரும், லண்டனில் வசிக்கும் அவரது மகனும் செதியாளர் மாநாட்டில் உரையாற்றினர். அவர்கள் தெரிவித்ததாவது,
 
அசாத் சாலி எனது மனைவியை அவருடைய நாவல வீட்டில் அடைத்துவைத்திருப்பது சம்பந்தமாக அசாத்சாலியின் மகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.
 
அவருக்கு சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள கைத்துப்பாக்கியை மகளுடைய கழுத்தில் குறிவைத்து மிரட்டியதன் காரணமாகவே அசாத் சாலியின் மகள் இது குறித்து எங்களுக்கு அறிவித்துள்ளார். அத்துடன் இது குறித்து அசாத் சாலியின் மகளும் அவருடைய சொந்த மனைவியும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செதுள்ளனர். இதன் பின்னரே தனது மனைவி அவரது வீட்டில் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. அத்துடன் எனது மனைவி எனது மகனுக்கு தொலைபேசி மூலம் தன்னை அசாத் சாலி கடத்தி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
எனது மனைவியை அவரது நாவல இல்லத்தில் தடுத்துவைத்திருப்பதாக வெலிக்கடை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடும் செயப்பட்டுள்ளது. எனது மனைவி காணாமல்போன நாளன்று கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.
 
அசாத் சாலி இனிமேலும் இந்த நாட்டில் எந்தப் பெண்ணுடைய வாழ்வில் அல்லது எவருடை குடும்ப வாழ்க்கையிலும் தலையிட்டு அதில் குழப்பத்தினை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே யாரிடமும் கூற முடியாத தனிப்பட்ட எனது குடும்பப் பிரச்சினையை இன்று ஊடகங்களுக்குத் தெரிவிக்கிறேன். இந்த ஊடகவியலாளர் மாநாட்டை நான் ஏற்பாடு செதுள்ளமையானது மிகவும் கவலையளிக்கக்க்கூடிய விடயமாக இருக்கிறது.
 
அதேநேரத்தில் இந்த விடயத்தினை ஊடகங்கள் மூலமாக அம்பலப்படுத்தி அரசியலில் பிரபல்யமடையும் வாப்பினை நான் ஒருபொழுதும் எதிர்பார்த்தவனாக உங்கள் முன்னால் உட்காரவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு மத்திய மாகாண சபைக்கு அசாத் சாலி உறுப்பினராக தெரிவு செயப்பட்டதற்கு பின்பே நான் அசாத் சாலியுடன் நட்பினை ஏற்படுத்திக் கொண்டேன்.
அந்தவகையில் எனது மனைவிக்கும் அசாத் சாலியின் மனைவிக்கும் இடையில் நட்பு மலர்ந்தது. அதன்பின்னர் அசாத் சாலி எனது குடும்ப நண்பரைப் போல் பழக ஆரம்பித்தார். அவரை முழுமையாக நம்பி நான் அவருடன் அதிகமான நட்பினை ஏற்படுத்திக் கொண்டேன். காலப்போக்கில் அசாத் சாலி, என்னுடைய மனைவியை அவரது மாய வலைக்குள் வீழ்த்தி எனது குடும்ப வாழ்க்கையில் விளையாடினார்.
 
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பும் எனது மனைவியினை கூட்டிக்கொண்டு இந்தியாவில் வசித்துள்ளமைக்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றது.
ஒரு நண்பனின் வீட்டுக்கு வந்து அவரோடு பழகிவிட்டு அவரது மனைவியை கூட்டிக்கொண்டு செல்லலாமா?
 
முஸ்லிம் திருமணச் சட்டத்தில் இவ்வாறானவர்களை கல்லெறிந்து கொல்லவேண்டும், கசையடி கொடுக்கவேண்டும்.
 
எனது மனைவி முறையாக தலாக் செய்து, அதன் பின்னர் இத்தா இருந்து விலகிய பின் அசாத் சாலி இஸ்லாமிய முறைப்படி திருமணம் முடிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment