Tuesday, September 22, 2015

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள உத்தேச தீர்மான வரைவுத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது!

Tuesday, September 22, 2015
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள உத்தேச தீர்மான வரைவுத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30ம் அமர்வுகளில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானம் அநேகமாக 24ம் திகதி சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச தீர்மானத்தின் உள்ளடக்கங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய நாடுகளின் ஜெனீவாவிற்கான இலங்கைப் வதிவிடப் பிரதிநிதி ரவினாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

உத்தேச தீர்மான வரைவு ஆவணத்தில் உள்ளடக்கமானது பிழையான, தீர்மானிக்கப்பட்ட, கால விதிப்பானதாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்களுக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் அமையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உத்தேச தீர்மானம் கூட்டு இணக்கப்பாட்டை ஏற்படுத்த வாய்ப்பாக அமையாது எனத் தெரிவித்துள்ளார்.

உத்தேச தீர்மானத்தின் பல பந்திகள் நல்லிணக்கத்திற்கு விரோதமான, நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு பிரதிகூலமான விடயங்களை கொண்டமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் சமாதானத்தை நிலைநாட்டவும் போதியளவு அவகாசம் வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அணுகுமுறையானது நல்லிணக்கத்தை சீர்குலைக்க முய்றசிக்கும் விசமிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதிகளவில் குற்றவியல் சட்ட விவகாரங்களை உள்ளடக்குவதன் மூலம் தீர்மானம் சமனிலையற்றதாக மாறிவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்த செய்யும் பரிந்துரைகள் ஒருமுகப் படுத்தப்பட்டதாக அமைவதே ஆரோக்கியமானதாக  இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment