Wednesday, September 23, 2015

மூன்று சிவில் உறுப்பினர்களுக் கும் பாராளுமன்றம் நேற்று ஏகமனதாக அனுமதி வழங்கியுள்ளது!

Wednesday, September 23, 2015
அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கப் பட்ட மூன்று சிவில் உறுப்பினர்களுக் கும் பாராளுமன்றம் நேற்று ஏகமன தாக அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய அரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரதிநிதிகளாக கலாநிதி அஹங்கமகே டியூடர் ஆரியரத்ன, ஜனாப் சிப்லி அkஸ் மற்றும் கலாநிதி ராதிகா குமாரசுவாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிவில் பிரதிநிதிகள் மூவருக்கும் அனுமதி பெறுவதற்கான பிரேரணையை சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதற்கு எவரும் எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில் மூன்று சிவில் உறுப்பினர்களும் ஏகமனதாக அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக ஒழுங்குப் பிரச்சினை யொன்றை எழுப்பிய தினேஷ் குணவர்த்தன எம்பி, அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களில் அமைச்சர்கள் உள்ளடக்கப்படமாட்டார்களென பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்தமுறை உறுதிமொழி வழங்கியிருந்தபோதும், இம்முறை மீண்டும் இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் வழங்கிய உறுதிமொழியை மீறும் வகையில் இது அமைந்திருப்பதாக அவர் கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்த சபை முதல்வர், தினேஷ் குணவர்த்தன எம்பி கூறும் விடயம் சட்டத்தில் உள்ளடக்கப்படவில்லையென்று சுட்டிக்காட்டினார்.

பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அவர்களால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் பிரதிநிதிகள் மூவர் உள்ளடங்கலான பத்துப்பேரைக் கொண்ட அரசியலமைப்புச் சபை இன்றையதினம் முதன்முறையாகக் கூடவுள்ளது. சுயாதீன ஆணைக் குழுக்களுக்கான பிரதிநிதிகளை அமைப்பது உள்ளிட்ட விடயங்களை அரசியலமைப்பு சபை ஆராயவுள்ளது.

மொஹமட்  ஷிப்லி அkஸ்

இலங்கையின் சட்டத் துறைக்கு இவர் அளப் பரிய சேவையாற்றியு ள்ளார். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய ஆணைக்குழுக்கள் மற்றும் சர்வதேச அமைப் புக்களில் அவர் அங்கம் வகித்துள்ளார்.

ஷிப்லி அkஸ் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவராவார். அதனைத் தொடர்ந்து அவர் தனது பட்டப்படிப்பை கொழும்பு பல்கலைக் கழகத்தில் மேற்கொண்டார். சட்டப் படிப்பினை பேராதனை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தார். முதுகலைமாணி பட்டத்தினை பிரித்தானிய இராஜ்யத்தின் லண்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1968 ஆம் ஆண்டு இவர் வழக்கறிஞராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

1969 இல் இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச தரப்பு சட்டவாதியாக நியமனம் பெற்றார். சட்டமா அதிபர் திணைக்களத்தில் இவர் 27 வருடங்கள் கடமையாற்றினார். அதனைத் தொடர்ந்து, 1992 ஆம் ஆண்டில் வழக்குரைஞர் நாயகமாக பதவி உயர்வு பெற்றார். இறுதியாக 1995 இலிருந்து 1996 வரை சட்ட மா அதிபராக கடமையாற்றி னார்.திணைக்களத்தின் சிவில் மற்றும் குற்றவியல் ஆகிய இரு தரப்புக்காகவும் இவர் சேவையாற்றியுள்ளார். இலங்கை வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக கருதப்படும் வழக்குகளிலும் இவர் பங்களிப்பு செலுத்தியுள்ளார்.

15 இற்கு மேற்பட்ட நாடுகளின் விமான சேவைகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது இவர் அரச தரப்பு பிரதிநிதியாக பங்கெடுத்துள்ளார்.

எயார் லங்கா நிறுவனத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் சட்ட ஆலோசகராக இவர் 1990 முதல் 1994 வரை இவர் சேவையாற்றியுள்ளார். 1985 முதல் 1994 வரையான காலப்பகுதியில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளராகவும் இவர் கடமைபுரிந்துள்ளார். சட்டமா அதிபர் பதவியிலிருந்து இவர் 1996 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். அப்போது முதல் அவர் வர்த்தக உயர் நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் சட்டத்தரணியாக செயற்பட்டு வருகிறார்.

இவர் 1994 முதல் இலங்கை சட்ட ஆணைக்குழுவின் உறுப்பினராவார். 2015 ஆம் ஆண்டில் இவர் மீண்டும் சிவில் விமான அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அஹங்கமகே டியுடர் ஆரியரட்ன

இவர் 1931 ஆம் ஆண்டு நவம்பர் 05 ஆம் திகதி காலி மாவட்டத்தி லுள்ள உனவட்டுன கிராமத்தில் பிறந்தவர்.

காலி, மஹிந்த கல்லூரியின் பழைய மாணவரான இவர் கல்வியியற் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்று 1972 ஆம் ஆண்டு வரையில் கொழும்பு நாளந்தா கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.

ஆரியரட்ன தனது முதலாவது வேலையை 1958 ஆம் ஆண்டு சர்வோதயா சர்மதான இயக்கத்தில் முன்னெடுத்தார். தனது கலைமாணி மற்றும் கலாநிதி பட்டங்களை இலங்கை வித்தியோதயா பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்ட பின் பிலிப்பைன் நாட்டின் எமிலியோ அகுயின்னல்டோ கல்லூரியிலும் கலாநிதி பட்டத்தை பெற்றார். இவர் பெளத்த மதம் மீது சிறந்த பற்றுடையவர். நீண்ட காலமாக இலங்கை அரசியல் மற்றும் சமூக அபிவிருத்தி செயற்பாடுகளில் ஆர்வம் செலுத்தி வருபவராவார்.

1969 ஆம் ஆண்டில் இவருக்கு ரமன் மக்சே விருது சமூக தலைமத்துவத்துக்காக வழங்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தினால் காந்தி சமாதான பரிசிலை வென்றார். 1992 இல் திவானோ சமாதான பரிசில், 2006 இல் ஆச்சர்யா சுசில் குமார் சர்வதேச சமாதான விருது ஆகியவற்றை வென்றுள்ளார்.

ராதிக்கா குமாரசுவாமி

திருமதி குமாரசுவாமி சட்டத்தரணியாவார். இவர் 1958 ஆம் ஆண்டு பிறந்தவர். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைத்துவ பதவி வகித்துள்ள இவர், பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கான ஐ. நாவின் விசேட தூதுவராகவும் பதவி வகித்துள்ளார்.

இவர் பெண்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் முன்னணி பெண் சட்டத்தரணியும் கூட அந்தவகையில் வன்முறைகளில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு குரல் கொடுப்பதற்காக இவர் ருவண்டா, கொலம்பியா, ஹெய் ட்டி, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார்.

மேலும் ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளிலும் இவர் பெண்களின் சுதந்திரம் தொடர்பில் ஆய்வில் ஈடுபட்டவர்.

இவர் 2003 ம் ஆண்டு மே மாதம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வின் தலைவராக நியமிக்கப்பட்டதுடன் நிவ்யோர்க் பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியில் உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார்.

பெண்களின் நிலை தொடர்பில் இவர் பல கட்டுரைகள் உள்ளடக்கிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் உலகளாவிய கற்கையினை மேற்கொள்வதற்காக இவர் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் 2014 ம் ஆண்டு இவர் முன்னணி எழுத்தாளராக நியமிக்கப்பட்டு ள்ளார்.

ஜனாதிபதியினால் இவருக்கு ‘தேசமான்ய’ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. நிவ்யோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் சர்வதேச பாடசாலை, யேல் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம், ஹவார்ட் பல்கலைக்கழகம் லியுவளிலுள்ள கெத்தலிக் பல்கலைக்கழகம், எடின்பரோ பல்கலைக்கழகம் எசெக்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மாணவியாவாரென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment