Tuesday, September 1, 2015

சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்சி தலைவர் பதவி கிடைக்­கு­மாயின் அதற்கு எதிர்ப்பு தெரி­விக்க மாட்டோம்: எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் நாம் ஆளும் கட்­சியின் கூட்­ட­ணியில் கைகோர்க்க மாட்டோம் விமல் வீர­வன்ச!

Tuesday, September 01, 2015
பாரா­ளு­மன்ற விதி­மு­றை­க­ளுக்கு அமைய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்சி தலைவர் பதவி கிடைக்­கு­மாயின் அதற்கு எதிர்ப்பு தெரி­விக்க மாட்டோம் என பாரா­ளு­மன்ற உறுப்­பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.
ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் ஐக்­கிய மக்கள் சுதந்­திர  முன்­ன­ணியின் சில உறுப்பினர்கள் கைகோர்த்து ஆட்­சி­ய மைப்­பதால் எம்­மையும் ஆளும் கட்­சி­யென கரு­தி­விட முடி­யாது. எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் நாம் ஆளும் கட்­சியின் கூட்­ட­ணியில் கைகோர்க்க மாட்டோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.
தேசிய சுதந்­திர முன்­ன­ணியால் நேற்று கொழும்பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
இப்­போது உரு­வா­கி­யி­ருக்கும் பாரா­ளு­மன்­ற­மா­னது ஒரு வரை­ய­றைக்குள் உட்­பட்­ட­தல்ல. இந்த அர­சாங்­கத்தில் யார் ஆளும்­கட்சி. யார் எதிர்க்­கட்சி என்ற அடை­யாளம் இல்­லா­துள்­ளது. அதேபோல் இவர்கள் கூறு­வ­தைப்போல் இந்த அர­சாங்­கத்தை தேசிய அர­சாங்­க­மாக வர்­ணிக்­கவும் முடி­யாது. ஏனெனில் இந்த அர­சாங்­கத்திற்கு அனைத்துக் கட்­சி­களின் ஆத­ரவும் கிடைக்­க­வில்லை. தேசிய அர­சாங்கம் அமையும் பட்­சத்தில் அர­சாங்­கத்தின் தேவைக்கு அமைய அமைச்­ச­ர­வையின் எண்­ணி­கையை அதி­க­ரிக்க முடியும்.

இந்த நிய­தியை நாம் முழு­மை­யாக ஏற்­றுக்­கொள்­கின்றோம். ஆனால் இந்த விதி­முறை இப்­போது அமைந்­தி­ருக்கும் அர­சாங்­கத்­துக்கு பொருந்­தாது. ஆனால் புதிய அரசில் அமைச்­ச­ர­வையின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்­க­வுள்­ள­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன. அகவே இது முழு­மை­யாக ஜன­நா­ய­கத்­துக்கு முர­ணான செயற்­பா­டாகும். அதையும் மீறி அமைச்­ச­ர­வையின் எண்­ணிக்­கையை அதிகரிக்கும் நிலைப்­பாட்டில் இந்த அர­சாங்கம் செயற்­ப­டு­மாயின் அதற்­கான முழு­மை­யான எதிர்ப்­பினை நம் வெளிப்­ப­டுத்­துவோம்.

எதிர்­வரும் முதலாம் திகதி பாரா­ளு­மன்றம் கூட­வுள்­ளது. இதில் சபா­நா­யகர் யார் என்­பதை தீர்­மா­னிக்­கப்­படும். அதேபோல் பாரா­ளு­மன்ற அமர்வின் பின்னர் கட்சி தலை­வர்கள் கூட்டம் கூட­வுள்­ளது. இந்த கூட்­டத்தில் எமது நிலைப்­பாட்டை நாம் முன்­வைப்போம். அமைச்­ச­ரவை அதி­க­ரிப்பை கட்­டுப்­ப­டுத்தக் கோரி நாம் சபா­நா­ய­க­ரி­டமும் தெரி­விப்போம். பாரா­ளு­மன்ற விதி­மு­றை­களை மீறி இந்த அர­சாங்கம் செயற்­பட முடி­யாது.

மேலும் பாரா­ளு­மன்­றத்தில் யார் எதிர்க்­கட்­சி­யாக செயற்­ப­டு­வது என்ற சிக்கல் நிலைமை எழுந்­துள்­ளது. ஆனால் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சிலர் கைகோர்த்து ஆட்­சி­ய­மைப்­பதால் எம்­மையும் ஆளும் கட்­சி­யென குறிப்­பி­டு­கின்­றனர். ஆனால் நாம் ஆளும் கட்சி அல்ல. எம்மை அவ்­வாறு தெரி­விக்க முடி­யாது. நாம் எப்­போதும் இந்த குழப்­ப­கர ஆட்­சியில் கைகோர்க்க மாட்டோம். ஆகவே நாம் எதிர்க்­கட்­சி­யா­கவே செயற்­ப­டுவோம். அதேபோல் பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யாக யார் செயற்­ப­டு­வது என்ற சிக்­க­லுக்கு சபா­நா­ய­கரே தீர்வு காண வேண்டும்.
 
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் எதிர்க்­கட்­சி­யாக செயற்­ப­டு­வது பாரா­ளு­மன்ற விதி­மு­றை­க­ளுக்கு அமை­வா­க­வெனின் நாம் அதற்கு முரண்படமட்டோம். அதேபோல் எதிர்வரும் முதலாம் திகதி அல்லது இந்த வாரம் பாராளுமன்ற கூடத்தின் போது இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும். அரசாங்கத்தில் யார் யார் அங்கம் வகிக்கின்றனர் என்றதைப் பொறுத்து பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி யார் என்பதை தீர்மானிக்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment