Sunday, September 6, 2015

ஐக்கிய தேசிய கட்சியின் 69 ஆவது வருட பூர்த்தி இன்று!

Sunday, September 06, 2015
ஐக்கிய தேசிய கட்சியின் 69 ஆவது வருட பூர்த்தி இன்று  கொண்டாடப்படுகின்றது.
 
அதன்நிமித்தம் பிரதான நிகழ்வுகள் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று  முற்பகல் 9.30 இற்கு நடாத்தப்படவுள்ளன.
 
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் விசேட அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கலந்துக் கொள்ளவுள்ளார்.
 
மேலும் இந்த நிகழ்வில் கட்சியின் பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக ஆளுங்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
 
1946 ஆம் ஆண்டு 06 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி நாட்டின் சுதந்திரத்தின் பின்னர் 35 வருடங்கள் ஆட்சியை கைப்பறியிருந்தது.
 
சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான டீ.எஸ் சேனாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியினூடாக தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அன்றிலிருந்து நாட்டின் சமூக, பொருளாதார, புனர்வாழ்வு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து ஐக்கிய தேசிய கட்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகள் இன்று வரை நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
 
நாட்டின் முதலாவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜே.ஆர் ஜெயவர்தனவினால் ஏற்படுத்தப்பட்ட திறந்த பொருளாதார கொள்கையின் காரணமாக பாரியதொரு மாற்றம் ஐக்கிய தேசிய கட்சியினால் ஏற்படுத்தப்பட்டது.
 
ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய மூன்று பேர் நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியாக செய்ற்பட்டுள்ளதுடன் இறுதியாக இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது 20 வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஆட்சி அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment