Monday, August 10, 2015

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போராட சொத்துக்களை விற்று ஈராக் சென்ற இங்கிலாந்து தாத்தா

Monday, August 10, 2015
லண்டன்:கொடூரமான பயங்கரவாத செயல்களில் ஈடுப்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட தனது குடும்பம் மற்றும் செல்ல நாயை பிரிந்து ஈராக் சென்றுள்ளார் இங்கிலாந்தை சேர்ந்த தாத்தா ஒருவர்.

53 வயதான ஜிம் ஆதர்டன் என்ற அந்த நபர் தன்னுடைய கார் மற்றும் இரண்டு மோட்டார் பைக்குகளை விற்றுவிட்டு கிடைத்த பணத்தில் ஆயுதங்கள் வாங்கிக்கொண்டு பல சிரமங்களை கடந்து ஈராக் சென்று சேர்ந்துள்ளார். தற்போது ஈராக் கிராமங்களில் வசிக்கும் கிறிஸ்தவ மக்களை பாதுகாக்கும் படையில் சேர்ந்துள்ளார்.

இவரின் இந்த முடிவுக்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் தனது முடிவிலிருந்து மாறாமல் செல்ல நாய் உட்பட அனைவரையும் பிரிந்து ஈராக் சென்றுவிட்டார் ஜிம் ஆதர்டன்.

தனது முடிவு பற்றி ஜிம் ஆதர்டன் கூறும் போது "நான் ஒன்றும் இளைஞன் கிடையாது. 2007 ம் ஆண்டு மாரடைப்பால் பாதிக்கப்பட்டேன். ஆனாலும் தீவிரவாதம் தொடர்பாக யாரும் எதுவும் செய்வது போல் தெரியவில்லை. எனவே தான் இதில் நானே களமிறங்கிவிட்டேன். என் பேரக்குழந்தைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதில் முக்கியமான விஷயம், ஜிம் ஆதர்டன் ஒரு முன்னாள் ராணுவ வீரரோ அல்லது போர்ப் பயிற்சி பெற்றவரோ இல்லை எனபது தான்.

No comments:

Post a Comment