Tuesday, August 18, 2015

ஒரே பார்வையில் தற்போதைய தேர்தல் நிலவரம்!!


 
2015  ஒரே பார்வையில் தற்போதைய தேர்தல் நிலவரம்
%
1,431,666
%
 1,366,118
%
 265,062
   
      
   
பிரதமரை தேர்ந்தெடுக்கும் பார்லிமென்ட் தேர்தலில், ராஜ்யபபக்ஷேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 42.8 சதவீத ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளது. யாழ்பாணம் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றது.
நேற்று(17-08-15), எட்டாவது பார்லிமென்ட் தேர்தல், அமைதியாக நடந்து முடிந்தது. ஓட்டுப்பதிவு, காலை 7:௦௦ மணிக்கு துவங்கியது. மக்கள், ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்தனர். மாலை 4:௦௦ மணிக்கு ஓட்டுப்பதிவு முடிவடைந்தது. இத்தேர்தலில், 70 சதவீதம் ஓட்டுகள் பதிவாயின. திரிகோணமலை, கண்டி, நுவரேலியா ஆகிய மூன்று மாவட்டங்களில், அதிகபட்சமாக, 75 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக, இலங்கையின் தலைமை தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. பதிவான ஓட்டுகள், ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து, இரவு 7:௦௦ மணிக்கு, ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.
 
தபால் ஓட்டு எண்ணிக்கையில் ரணில் விக்ரம சிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி திரிகோணமலை, காலே, புத்தளம், பொலனருவா உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும், ராஜ்யபக்ஷேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி மாத்தறை, ஹம்பன் தோட்டா, ரத்தினபுரி ஆகிய 3 மாவட்டங்களிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு, மட்டக்களப்பு, யாழ்பாணம் மாவட்டங்களில் முன்னிலை வகித்தது.
 
ஓட்டு சதவீதத்தில் ராஜ்யபக்ஷேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 42.8 சதவீத ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளது. ஐக்கிய தேசிய கட்சி 40.6 சதவீத ஓட்டுகளும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 11 சதவீத ஓட்டுகளும் பெற்றுள்ளன.
 
யாழ்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி
யாழ்பாணம் மாவட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. அங்குள்ள 11 தொகுதிகளிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
பெற்ற ஓட்டுகள் :
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 30,232
தமிழ் தேசிய கூட்டமைப்பு-  259,434
ஐக்கிய தேசிய கட்சி -  1,154,820
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி-1,206,061

No comments:

Post a Comment