Monday, August 10, 2015

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது!

Monday, August 10, 2015
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் சடலம் சற்று முன்னர் தோண்டி எடுக்கப்பட்டது.

தெஹிவளை வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் மையவாடியிலிருந்து சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
 
பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சடலத்தை தோண்டி எடுக்கும் போது ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
சடலத்தை தோண்டி எடுக்கும் நடவடிக்கை காலை 7.30க்கு ஆரம்பமாகி 9.50 அளவில் பூர்த்தியானது.

தாஜூடீனின் புதைகுழியில் வெப்பம் செடியொன்று நாட்டப்பட்டதாகவும் அது 12 அடி மரமாக வளர்ந்திருந்ததாகவும் அவரது சகோதரரும் சகோதரியும் தெரிவித்துள்ளனர்.

மரத்தை தோண்டி எடுத்து அதன் பின்னர் சடலம் தோண்டப்பட்டது.

இதேவேளை, தாஜூடீனின் மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு பிரதேச மக்கள் அமைதியான முறையில் பள்ளிவாசலுக்கு அருகாமையில் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
 
புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
 
தற்போது சடலம் கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரியின் பொறுப்பில் உள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment