Wednesday, August 19, 2015

நானே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சட்டரீதியான செயலாளர்: சுசில் பிரேமஜெந்த!

Wednesday, August 19, 2015
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சட்டரீதியான செயலாளர் நானே என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜெந்த தெரிவித்துள்ளார்.தேர்தல் செயலகத்தில்  நேற்று நடந்த ஊடக சந்திப்பிலே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார்.தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் ‘ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்ட நாளிலிருந்தே நான் தான் செயலாளராகச் செயற்பட்டு வருகின்றேன்.
 
அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி காலத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போனஸ் ஆசனங்களுக்குரிய தேசிய பட்டியல் உறுப்பிர்கள் குறித்து அவருடன் கலந்துரையாடி முடிவுகளை எடுத்திருந்தேன். அதேபோல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்திலும் அவ்வாறே செயற்பட்டிருந்தேன். ஆனால் தற்போது நடைபெற்றுள்ள தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேசிய பட்டியல் குறித்து நான் விலக்கி வைக்கப்பட்டுள்ளேன்.
கடந்த ஜீன் மாதம் 13 திகதி கூட்டமைப்பின் கட்சி தலைவர்களுடன் பேசி 29 தேசிய பட்டியல் உறுப்பினர்களது பெயர்களை தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பியிருந்தேன். இந்த நிலையில் நான் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளேன். ஆகவே இதனை ஒரு பிரச்சனையாக கருதாது தீர்க்கப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment