Friday, July 17, 2015
புலிகளை வீழ்த்திய மஹிந்த ராஜபக்ஷவுக்கா அல்லது ரணில் விக்கிரமசிங்கவுக்கா வாக்களிப்பது தொடர்பில் நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டு மக்கள் நிம்மதியாக அனைத்து பகுதிகளுக்கும் சென்று வரும் சூழலை அமைத்து கொடுத்தவர் மஹிந்த ராஜபக்ஷ ஆவார்.மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்திய சமாதானமான அபிவிருத்தி சூழலிலேயே ரணில் விக்கிரமசிங்க பயணிக்கின்றார்.
நல்ல தலைவர்கள் வேறு எங்கும் இல்லை. இந்த மேடையில் தான் நல்ல தலைவர்கள் அமர்ந்து இருக்கின்றார்கள்.கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்ததையடுத்து தனது செயலாளரை அழைத்து, மைத்திரியின் பதவியேற்புக்கு தேவையான கடமைகளை ஒழுங்கு படுத்தி கொடுக்குமாறு கூறினார்.

இதனையடுத்து காலை 6 மணியளவில் தனது சொந்த ஊரான மெதமுலனவுக்கு சென்றார். இதன் மூலம் புலப்படுகின்றது மஹிந்த ராஜபக்ஷவின் உயர்ந்த உள்ளம். மஹிந்த ராஜபக்ஷ பிரதாமராக போவது நிச்சயம்.
2002 ஆம் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது விடுதலை புலிகளிடம் மண்டியிட்டு அவர்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றி கொடுத்தார்.
2002 ஆம் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது விடுதலை புலிகளிடம் மண்டியிட்டு அவர்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றி கொடுத்தார்.
ஆனால் மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறு அல்ல புலிகளிடமிருந்து நாட்டை மீட்டு மக்கள் சமாதானமாக வாழக் கூடிய சூழலை அமைத்து கொடுத்தார். இதன் மூலம் எதிர்வரும் தேர்தலில் அமோக வெற்றி பெற்று பிரதமராகுவது உறுதியாகும்.
எனவே நட்டை புலிகளிடமிருந்து மீட்ட மஹிந்தவுக்கா அல்லது ரணில் விக்கிரமசிங்கவுக்கா வாக்களிப்பது தொடர்பில் நீங்களே தீர்மானிக்க வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment