Monday, July 27, 2015

தேசிய அரசாங்கம் அமைக்கும் உத்தேசம் கிடையாது: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

Monday, July 27, 2015
தேசிய அரசாங்கம் அமைக்கும் உத்தேசம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதியின் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தை அமைக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். மாத்தளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலகு வெற்றியீட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூடட;மைப்பு அதிகாரத்தை பகிருமாறு கோரி வருகின்றதாகவும், தமது கட்சி அதற்கு இடமளிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாடு பிளவடைவதனை அனுமதிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளுக்கு ஆதரவான ஈழக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும், தமிழ் மக்களின் யதார்த்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ  தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment