Saturday, July 25, 2015
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடுவது கோமாளித்தனமான செயல் என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் தொடர்ந்து கூறுகையில், 'எவ்வித காரணங்கள் மற்றும் தொடர்புகளும் இல்லாமல் சிவாஜிலிங்கம் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை கோமாளித்தனமாகவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுகின்ற குருநாகல் மாவட்டத்தில் சிவாஜி போட்டியிடுவது, மஹிந்தவின் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது. தன்னை எதிர்த்து புலிகளின் தலைவரின் உறவினர் ஒருவர் போட்டியிடுகின்றார் என மஹிந்த தனது தேர்தல் பிரசார நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.

இது மஹிந்தவின் வெற்றிவாய்ப்பை அதிகரித்துள்ளது. இதனால், சிவாஜிலிங்கத்துக்கும் தமிழ் மக்களுக்கும் எவ்வித நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment